திங்கள், ஜூலை 31, 2006

Find the Faces

கண்கள் இங்கே
முகம் எங்கே?
புகழ்பெற்றவர்களின் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்


  1. இந்த பதிவிற்கு விக்னேஷுக்குத்தான் (தண்டோரா - இது கண்டதை சொல்லும் - » கண்ணோடு காண்பது யார்??) நன்றியை நவில வேண்டும்



  2. ஆரம்பத்திலேயே சோதனையா?



  3. இவருக்கெல்லாம் எந்த துப்புமே வேண்டாமே...



  4. அக்மார்க் குமுதம் போட்டிகள் இப்படித்தான் இருக்கும்



  5. பழைய நினைப்புதான் பேராண்டி



  6. கண்களை எங்கே பார்க்கிறாங்க



  7. திருப்பதியில் சிலை இருக்கிறதாமே?



  8. நேதாஜியிடம் தோற்றவர்



  9. ஒன்றாவது கஷ்டமாக இருக்க வேண்டாமா?



  10. ஒன்றாவது எளிதாக இருக்க வேண்டாமா?



  11. தாஜ் மஹால் தேவையில்லை




| |

ஞாயிறு, ஜூலை 30, 2006

Classic Arts - PAK's Appreciation Series (1)

மேற்கத்திய ஓவியங்கள்- ஒரு எளிய அறிமுகம்
- பி. ஏ. கிருஷ்ணன்
I

ஓவியம் என்றால் என்ன?
மூன்று பரிமாணங்களில் பார்த்ததை (சமயங்களில் பரிமாணங்களைக் கடந்து நினைத்ததை அல்லது உணர்ந்ததை) இரு பரிமாணங்களில் மரம், துணி, சுவர், காகிதம் போன்ற பரப்புகளில் வரைவது. வரைந்தது நம்மை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே ஒரு ஓவியம் காலத்தை வென்றதா இல்லையா என்பதை வரையறுக்கிறது. காலத்தின் கைகளிலிருந்து மீட்கப் பட்ட கணக்கில்லாத ஓவியங்கள் உலகெங்கும் அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. இவற்றை கடந்து நாள்தோறும் பலர் செல்கிறார்கள். னால் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட எல்லா ஓவியங்களும் காலத்தை வென்றதாக அடையாளப் படுத்தப் படவில்லை. அழியாது இருப்பதே வெற்றியாகி விட முடியாது. மிகச் சில ஓவியங்களே தலைமுறை தலைமுறைகளாக திரும்பத் திரும்பக் கவனிக்கப் படுகின்றன. திரும்பத் திரும்ப பொருள் கோள் (interpretation) செய்யப் படுகின்றன. இந்த மிகச் சிலவற்றில் ஒரு சிலவற்றை பற்றியும் இவற்றை வரைந்த ஓவியர்களைப் பற்றியும் இந்தத் தொடர் பேச இருக்கிறது.

பேசு முன் சிலவற்றைத் தெளிவு படுத்தி விடுகிறேன். நான் ஒரு ஓவியன் அல்ல. ஒரு திறனாய்வாளனும் அல்ல. நான் பார்த்து பிரமித்தவன். மனிதனால் இத்தனை உச்சங்களை எட்ட முடியுமா என்று மலைத்தவன். உச்சங்களை எட்டிய கலைஞர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகளைப் பற்றியும் ஓரளவு படித்தவன். படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்தத் தொடர். தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள இந்தத் தொடர் சிறிது உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

II

சென்ற வருடம் பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்திற்கு நண்பர் பாலாஜியோடு சென்றிருந்தேன். பல ஓவியங்களைப் பார்த்து பார்த்து கண்கள் பஞ்சடைவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. பசி வேறு. உணவகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டே நடக்கும் போது மிகத் தொலைவில் ஒளி பாய்ச்சப் பட்ட ஓவியம் ஒன்று தெரிந்தது. என்னை அறியாமலே சொன்னேன், ‘பாலாஜி, அது ஜான் ஸிங்கில்டன் காப்லியின் ஓவியம். வாட்ஸனும் சுறாமீனும் என்பது ஓவியத்தின் தலைப்பு என்று நினைக்கிறேன்’. பாலாஜி அருகே சென்று பார்த்தார். நான் சொன்னது சரிதான் என்று உறுதி செய்தார்.

எனக்கே ஒன்றும் புரியவில்லை.

காப்லியின் இந்த ஓவியத்தின் பிரதியைப் நான் பார்த்து ஒரு நாற்பது வருடங்களாவது இருக்கும். என்னுடைய தந்தையின் நண்பர் கோபால பிள்ளை எனக்கு மேற்கத்திய ஓவியங்களை அறிமுகம் செய்தவர். அவர் எனக்குப் பார்க்கக் கொடுத்த புத்தங்களில் ஒன்று “Great Painters and Great Paintings”. Reader’s Digest வெளியீடு. அந்தப் புத்தகத்தில் பேசப் பட்ட பல ஓவியர்களையும் அவர்கள் வரைந்த ஓவியங்களின் பெயர்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். எழுதப் பட்ட பெயர்களில் காப்லியின் இந்த ஓவியமும் ஒன்று. எழுதும் போது படித்தது நினைவில் ஒட்டிக் கொண்டு நாற்பது வருடங்கள் கழித்து உதிர்ந்திருக்கிறது. இத்தகைய உதிர்வுகள் காலம் காலமாக நடந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உதிர்வுகளுக்காகவே ஓவியர்கள் தங்கள் வாழ்நாட்கள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காப்லியின் இந்த ஓவியத்தின் ஈர்ப்புத் தன்மையின் காரணம் என்ன? சுறாமீனின் திறந்த, கூரிய பற்கள் நிறைந்த வாயும் அதனிடமிருந்து தப்ப வழியின்றி மல்லாந்து மிதக்கும் சிறுவனும் என்னுள்ளே இத்தனை ண்டுகள் இருந்திருக்கிறார்கள். யார் இந்தச் சிறுவன்? தில்லிக்கு வந்ததும் இந்த ஓவியத்தைப் பற்றிப் படித்துப் பார்த்தேன். 1749 ம் ண்டு க்யூபாவிற்கு அருகே நடந்த சம்பவம் இது. கரையருகே நீச்சலடித்துக் கொண்டிருந்த வாட்ஸன் என்ற சிறுவனை சுறாமீன் ஒன்று தாக்கியது. அந்தத் தருணத்தை ஓவியமாக காப்லி வடித்திருக்கிறார்.

சுறா வாட்ஸனை மூன்று முறை தாக்கியது. இந்தப் ஓவியம் மூன்றாவது தாக்குதலுக்கு முந்திய தருணத்தை சித்தரிக்கிறது. சுறாமீனின் வாயில் மெல்லிய சிவப்பு; சிறுவனின் முகத்தில் உறைந்த பயம்; அவனைக் கையைப் பிடித்து தூக்குபவர்களின் முகங்களில் இறுக்கம், கவலை அதிர்ச்சி; சுறாவைத் தாக்குபவரின் வேகம்; இவை எல்லாவற்றையும் ஓவியத்தில் கொணர காப்லியால் முடிந்திருக்கிறது. சிறுவன் காப்பாற்றப் பட்டானா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இந்த ஓவியம் நம்மைத் துடிக்க வைக்கிறது.

சிறுவன் தனது வலது காலைச் சுறாவிற்குக் கொடுக்க நேர்ந்தது. னால் பிழைத்துக் கொண்டான். பின்னால் பெரும் வணிகனாக உயர்ந்து லண்டன் நகரத்து மேயராக ன வாட்ஸன் தன் கதையை காப்லியிடம் சொல்லி அவர் வரைந்த ஓவியம் இது. இந்த ஓவியத்தின் மீது காப்லிக்கு மிகப் பெருமை. அதனால் அதை இன்னொரு முறை வரைந்து தன்னுடைய ஸ்டூடியோவிலேயே வைத்துக் கொண்டிருந்தார். இந்த ஓவியம்தான் பாஸ்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.



III

மனிதன் எழுதுவதற்கு வெகுகாலம் முன்பே வரைய ரம்பித்து விட்டான். மேற்கத்திய ஓவியங்களின் கதை ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் உள்ள குகை ஓவியங்களிலிருந்து ரம்பிக்கிறது. இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு முந்தியவை. மஞ்சட் காவி (ochre) கரி போன்றவைகளைக் கொண்டு வரைந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டு குகை ஒன்றில் இத்தகைய ஓவியங்கள் முதன் முதலாகக் கண்டு பிடிக்கப் பட்ட போது விமரிசகர்கள் இவற்றை போலிகள் என்று நிராகரித்து விட்டார்கள். பழைய கற்கால மனிதன் இத்தகைய ஓவியங்களை வரைந்திருக்க முடியும் என்று அவர்கள் நம்பத் தயராக இல்லை. இன்று உலகெங்கும் பழைய கற்கால மனிதனின் கலைத் திறனுக்குச் சான்றாக பல குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு விட்டன.

இந்த ஓவியங்களில் எனக்கு மிகப் பிடித்தது லாஸ்கோ (Lascaux) குகை ஓவியங்கள். இந்த பிரெஞ்ச் ஓவியங்கள் 1940ம் ண்டு நான்கு சிறுவர்களால் கண்டு பிடிக்கப் பட்டன. லாஸ்கோ காட்டில் ஒரு பைன் மரம் இருந்த இடத்தின் கீழே ஒரு குறுகிய வழி இருப்பதை இவர்கள் பார்த்தார்கள். அந்த வழியாக இறங்கி ஒரு குகையை வந்தடைந்தார்கள். இந்தக் குகையின் சுவர்களில்தான் பல மிருங்களின் உருவங்கள் -எருதுகள், பசுக்கள் குதிரைகள், மான்கள் போன்றவைகளின் - தீட்டப் பட்டிருந்தன. மனிதனும் மிகச் சில கோடுகளால் தானும் தீட்டப் பட்டு விட்டேன் என்று அறிவித்துக் கொண்டிருந்தான். இந்த குகையை சென்றடைவது மிகக் கடினமாக இருந்ததால் இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் வருடங்கள் தாக்குப் பிடித்து விட்டன. னால் 1940ல் இருந்து 1955 வரை இந்த ஓவியங்களைப் பார்க்க ஏகப் பட்ட கூட்டம். மனிதன் கொண்டு வந்த கரியமிலக் காற்று பதினைந்தே வருடங்களில் ஓவியங்களை ஒரு கை பார்த்து விட்டது. இனி மனிதர்கள் குகைக்குள் வந்தால் மிஞ்சுவது மனிதர்கள் மட்டுமே என்பதை பிரஞ்சு அரசு உணர்ந்து இந்தக் குகைக்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதித்தது. ஓவியங்களின் பிரதிகள் லாஸ்கோவிலேயே இன்னொரு குகை நிர்மாணிக்கப் பட்டு அதன் சுவர்களில் வரையப் பட்டன. இந்தப் பிரதிகளைத் தான் இன்று நாம் பார்க்க முடியும்.

இந்த ஓவியங்களில் புகழ் பெற்றது ‘காயமுண்ட எருதால் தாக்கப் படும் மனிதன்’ என்ற ஓவியம். இருண்ட குகையில் கல் விளக்கில் மிருகக் கொழுப்பை (அல்லது எலும்பு மஜ்ஜையை)எரித்து வெளிச்சம் வர வழைத்து வரையப் பட்ட ஓவியம் இது. சிலிர்த்துக் கொண்டு, வாலைச் சுழற்றிக் கொண்டு மனிதனைக் குறி வைத்துக் கொண்டு பாயத் தயாராக நிற்கிறது எருது. ஒரு மிருகத்தின் இயக்கத்தை இவ்வளவு துல்லியமாக சித்தரித்த இவன் நிச்சயமாக ஒரு மகத்தான கலைஞன். மனிதனை அவன் இத்தனை துல்லியமாக வரைவதற்குத் தகுதியானவனாக நினைக்கவில்லை. னாலும் அவனைக் குறியிடும் கோடுகள் அவனுடைய பேரச்சத்தையும், அவன் கால்கள் இடறுவதையும் வியக்கத் தக்க வகையில் நம் முன்னால் கொண்டு வந்து விடுகின்றன. மனிதனுக்குக் கீழே ஒரு பறவை. ஒரு கோலின் மீது நிற்கிறது.

இவ்வளவு உழைத்து யாருமே வர முடியாத ஓர் இடத்தில் இருபது அடிக்கும் மேற்பட்ட துவாரத்தின் அடியில் இந்த ஓவியங்களைத் தீட்டியதின் காரணம் என்ன? சில விமரிசகர்கள் இப்படி இயற்கையாக மிருகங்களின் உருவங்களைத் தீட்டினால் மனிதன் அவைகளின் பலத்தையும் திடத்தையும் தான் அடைய முடியும் என்று நினைத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். சிலர் இவை பூசாரிகளால் மந்திர வேலைகளுக்காக வரையப் பட்டிருக்கலாம் என நினைக்கிறார்கள். மற்றும் சிலர் நரம்புசார் உளவியல் முறையில் இந்த ஓவியங்களை ராய்ந்து கிறக்கம் தரும் விதைகளையோ அல்லது இலைகளையோ உண்டதனால் மனதில் தோன்றும் வடிவங்களை ஓவியங்களாக வடிக்கும் முயற்சியாக இவை இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். நமக்கு இந்தகைய ராய்ச்சிகள் தேவையில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்கும் கலைக்கும் உள்ள உறவு பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு மேற்பட்டது என்று நினைப்பதே நமக்கு நிறைவைத் தந்து விடுகிறது. இந்த நிறைவு காலங்களையும் நாடுகளையும் மொழிகளையும் கடந்தது.

IV

இவ்வாறு இருண்ட குகைகளில் துவங்கிய ஓவியக்கலையின் வரலாற்றின் அடுத்த குறிப்பிடத் தக்க காலம் எகிப்தில் தொடங்குகிறது. அன்றைய எகிப்தியர் வாழ்க்கை மரணத்திற்கு அப்புறமும் வாழப்படுகிறது என நம்பினார்கள். அது வாழப் படும் இடமும் உலகமும் வேறு. அவ்வளவுதான். அவர்கள் இறந்தவர்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்று நிர்மாணித்த பல கலைச் சின்னங்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்கள் மிகவும் விரும்பியவை கட்டிடக் கலையும் சிற்பக் கலையும்தான். ஓவியங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். னால் ஓவியங்களை வரைவதற்கு அதிகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவர்கள் கல்லறைச் சுவர்களை அழகு செய்வதற்கு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பணக்கார எகிப்தியர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களிலும் ஓவியங்களை வரையச் செய்தனர். னால் அவற்றில் தப்பியவை மிகச் சிலவே.

எகிப்திய ஓவியங்களில் பெரும்பாலானவை Fresco Secco என்ற முறையில் வரையப் பட்டிருக்கின்றன. இந்த முறையில் ஓவியம் தண்ணீரில் கலந்த வண்ணக் கலவை கொண்டு சுண்ணாம்பு பூசி நன்றாக உலர்ந்த சுவரில் தீட்டப் படுகிறது.

எகிப்தியர்கள் மனிதர்களை வரைந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களையும் டைகளையும் மிகச் சிறப்பாக வரைந்தார்கள். எகிப்திய ஓவியக் கண்கள் நம்மை எப்போதும் நேராகப் பார்க்கின்றன-முகங்கள் பக்கவாட்டில் வரையப் பட்டிருந்த போதிலும். இந்த ஓவியங்கள் காட்சியின் ‘உயிர்’ என்று எதை நினைக்கின்றனவோ அதை வலியுறுத்துகின்றன. உதாரணமாக ‘அழுகின்ற பெண்கள்’ என்ற ஓவியத்தில் அதன் உயிர் பெண்களின் கண்ணீர். எனவே ஓவியத்தில் இருக்கும் எல்லாப் பெண்கள் கண்களிலிருந்தும் மூன்று அல்லது நான்கு தாரைகளில் கண்ணீர் வெளிவந்து அவர்கள் கன்னங்களில் மூன்று அல்லது ஐந்து துளிகளாக இறங்குகிறது.

எகிப்தியர்கள் பறவைகளையும் மிருகங்களையும் வரைந்திருக்கும் விதம் அசதாரணமானது. நெபாமன் கல்லறையில் வரையப் பட்டிருக்கும் பறவை வேட்டைக் காட்சியில் வேட்டையாடும் மனிதனும் அவனது மனைவியும் மகளும் விரைத்து நிற்பது போல நமக்குத் தோன்றுகிறது. னால் அதே ஓவியத்தில் பாய்ந்து பறவையைப் பிடிக்க முயலும் பூனை உயிருள்ளது. பறவைகளும் வண்ணத்துப் பூச்சியும் பறப்பது என்றால் என்ன என்பதை மூவாயிரம்ண்டுகளுக்குப் பின்னும் நமக்கு விளக்குபவை.

பி. ஏ. கிருஷ்ணன்

The paintings are available in the following sites:
1. Lascoux
2. Watson and the shark
3. Fowling Scene




| |

சனி, ஜூலை 29, 2006

Name the Novel & the Author

புகழ் பெற்ற நாவல்களின் கடைசி பத்திகள். (ஒரு மாறுதலுக்காகத்தான் :-) இந்த ஐந்துடன் இந்தப் பதிவுத்தொடர் நிறைவுறுகிறது. மறுமொழிந்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?


#1. ஜானின் கடுகடுப்பான பார்வை இன்னும் அதிக கடுகடுப்பாக மாறியது. ஒரு செத்த முகத்தின் தோலின் தடிப்பு அவன் முகத்தில் ஏறியது. பல சிலந்திகள் அதில் கூடு கட்டி ஊர்ந்தபடி இருந்தன உடைந்த கதவுகளுக்கிடையில் பலரின் பழமைப் பற்று எலியாய் ஊர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தப்பி ஓடும் மனிதர்களின் அவசரங்கள் கூட அவர்களின் மனதிலிருந்து வெளியில் தப்பி வந்து அடிபட்ட தவளைகள் போல் பின்னங்கால்கள் இழுபட நகர்ந்து நிழலுக்குள் பாதுகாப்பாய்ப் போனதைக் காணப் பரிதாபமாக இருந்தது.

பலரது கடைசி அபயக்குரல் இன்னும் சுவர்களில் ஒட்டியபடி சப்தமெழுப்பிக் கொண்டிருக்கையில், மனிதர்களின் முகங்களிலிருந்து வழியும் அவர்களின் புராதனக் கனவுகளை மிகக் கவனமாக உற்றுப் பார்த்தபடி பால், நடுங்கும் தம் கரங்களில் ஒரு புத்தகத்தைப் பிடித்தபடி நடந்தான். நிமிர்ந்து நின்ற போது, அவனுடைய கண்கள், உடைந்த தொடைகளையும், தரைப் புழுதியில் குப்புறக் கிடந்த மனித மனங்களின் ஆசைகள் என்ற குப்பைக் கூளங்களையும் பார்த்தன. இதழ்களில் லேசாக நகை தோன்றி மறைந்தது.

மீண்டும் இரவு வந்த மறுநாளில் புராதனக் குடிப் பெருமை காயங்களுடன் மறுபடி மறுபடி த்ரையில் விழுந்தது. அப்போது பாலின் முகத்தில் வேதனையுணர்வுகளின் வேர் ஓட, அவன் மனக் குகைக்குள் மறதியும், வௌவால்களும், துப்பாக்கிகளின் மருந்து நெடியும் எழுந்து சஞ்சாரமிட்டன. சிநேகபுரத்தின் புராதனக்குடியினர் கூடும் ஊர் சத்திரத்தின் இடிந்த மணிக் கூண்டில் ஏறி நின்று ஊரைப் பார்த்தான் பால்.

புராதன வார்த்தைகளையும் கதைகளையும் நேசித்த மனிதர்களும் அவர்களுடன் கடந்த காலங்களும் தூரத்தில் செத்துப் போய்க் கிடந்தன. அக்காட்சி, பாலின் மனதில் கொடூர நினைவுகளை எழுப்பின. ஆனாலும் எதிர்காலத்தின் குமாரனான பால் அதற்காய் பச்சாதாபப்படவில்லை.

அப்போது அவ்வூரை விட்டு அதன் எல்லையை நோக்கிச் சிலுவையுடன் புறப்பட்ட வெள்ளைக் கொடி மனிதர்கள் ஊர்வலமாக செல்கையில் அவனைக் கவனித்தனர். அவர்கள் ஏனோ அவனைத் திரும்பிப் பார்த்ததை அவன் தூரத்தில் மணிக்கூண்டில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

நேயர்களே, இக்கதையை ஒருவர் படித்தாலும், படித்ததைக் கேட்டாலும், ஒருவர் படிக்க இன்னொருவர் கேட்டாலும், நவக்கிரகங்களின் கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள். அந்த அளவு பழமை கொண்டிருக்கிறது இக்கதை. இத்தகைய பழமை ஞாபகங்களில் சிக்கிய * * * கதை, இங்ஙனம் முற்றும்.



#2. அருகே கோவில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு 'இங்கே வா' என்று குறிஞ்சி ஆண்ட்வனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறித் தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்குமுன் போய் நின்றாள் அவள்.

அர்ச்சகர் கற்பூர சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய்சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச்சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. 'துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா' என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? "அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது" என்று பித்துப் பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.

"பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!"

....

வழியின் இருபுறமும் வெள்ளம் போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறுகொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.



#3. 2. எனது பாத்திரங்களிலேயே மிக அதிகமாக எனது சாயலைக் கொண்டு உருவானவன் செல்லப்பா. எனக்கும் பிரியமானவன்.

1. விசுவம்?

2. செல்லப்பாவைப் போலவே விசுவமும் எனது சில அம்சங்களைக் கொண்டு படைக்கப்பட்டவன் தான். நான் ஒரு 'இரண்டு கட்சி' ஆசாமி. எனக்கு உணர்ச்சிகளின் நுட்பமான, எளிதில் பிடிபடாத, நெளிவு சுளிவுகள் எப்படி இஷ்டமோ அப்படியே அறிவுபூர்வமான சர்ச்சையும் ஆய்வும் இஷ்டம். இது ஒரு முரண்பாடு என்றால் இதன் இரு எல்லைகளின் பிரதிபலிப்புகளே செல்லப்பாவும் விசுவமும். செல்லப்பா உணர்ச்சியே வடிவானவன். விசுவம் அறிவே வடிவானவன். இது ஒரு தோராயமான விளக்கம்தான், யாரும் முழுதும் உணர்ச்சிப் பிண்டமும் இல்லை, முழுதும் அறிவுச்சுடருமில்லை.

1. அப்படியானால் பத்ரி man of action?

2. ஆமாம், செயல் வீரன். அறிவும் உணர்ச்சியும், (உடனடி பாதிப்புகளை ஏற்படுத்துகிற) செயலும் ஓரிடத்தில் இணைந்திருப்பதில்லையென்பதே வாழ்க்கையின் irony?

1. ஸோ, இந்த irony '* *' ஆதாரச் சரடா?

2. இல்லை, முழுதும் அப்படியில்லை. நாவலில் ஒரு நம்பிக்கைச் சரடு இழையோடுகிறது. அதே சமயத்தில் அது எளிமைப்படுத்தப்பட்ட வகையினதாக இல்லாமல் இன்றைய தலைமுறையினர் அரவணைத்துக் கொள்ளும் விதமாக அமைக்க முயன்றிருக்கிறேன்... இந்தத் தன்மை - credibility - ரொம்ப முக்கியம். இன்றைய சூழ்நிலையில் தர்மம் அதர்மத்தை வென்று விடுவதாக நாவலில் எழுதுதல் ஒரு வெகுளித்தனம், அல்லது போலித்தனம்; சிலர் அந்தரங்க ஈடுபாடின்றி சிரார்த்தமும் சந்தியாவந்தனமும் செய்வது போல (இத்தகையவர்களை இந்நாவல் மெல்லிய புன்னகையுடன் சீண்டுகிறது) வாழ்க்கையின் தர்மத்தையும் நாவலின் தர்மத்தையும் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள். நாவலின் தர்மம் கலையுடன் இலக்கிய நேர்மையுடன், தொடர்புடையது. இந்நாவலின் moral centre எனப்படுகிற தார்மீக மையம் பாஸிடிவ்வாகவே இருப்பதை நுட்பமான வாசகன் புரிந்துகொள்வான்; ஆக்க பூர்வமான கவலையையும் (சமூக) சிரத்தையும் பொறுப்புகளையும் கிளர்ந்தெழச் செய்யும் வண்ணம் அதன் ஒட்டு மொத்தமான கட்டமைப்பு அமைந்துள்ளதை உணர்வான்.
.....
இயற்கை என்பதே சாந்தத்தின், ஸத்வ குணங்களின் குறியீடாக...

1. ஆமாம். செல்லப்பா இவ்விதத்தில் ஒரு நவீன போதிஸத்துவன். தத்தம் 'தனித்துவங்களை' முடமாக்கிக் கொண்டு ஒரே திசையில் தத்தித் தத்திச் செல்லும் மனிதர்களிடையே...

2. (தொண்டையைக் கனைத்துக் கொண்டு) கடைசியாக, எனக்கு அதிருப்தியளித்த ஒரு விஷயம் பற்றி. செல்லப்பாவின் அம்மாவின் மரணம்... அது அவசியந்தானா?

1. அவள் தன் மருமகளை புதிய தலைமுறைப் பெண்மை பற்றிய ஒரு கொச்சையான 'பூர்ண விடுதலை' பிம்பத்தில் பொருத்தி, அந்த பிம்பத்துடன் ஓட்டி போட முயலுகிறாள். ஆனால், ஒரு முக்கிய கட்டத்தில் தான் கடைசியில் தன் அம்மா, பாட்டி ஆகியவர்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்பதை உணருகிறாள். இது அவளைச் சிதற அடித்து விடுகிறது... moment of truth.

2. நாமெல்லாருமே, ஒரு விதத்தில், சரியோ தவறோ, வெவ்வேறு உருவகங்களின் கைதிகள்தான்; இல்லையா?

1. வெவ்வேறு 'வேடங்களின்' கைதிகள். அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?' என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலவாணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில 'தியரிகளை' உச்சாடனம் செய்து கொண்டு, 'உஞ்ச விருத்தி' செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள், ஆண்ன் 'அடிமை', 'மகிழ்வூட்டும் கருவி' - அல்லது இந்தப் பிம்பளுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள் - என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், 'வேடங்கள்' அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityயின், ஒரு alienationனின், கைதிகள். இத்தகைய பல கைதிகளையே '* *' அறிமுகம் செய்கிறது.



#4. அன்று சாவடிக்குப்பம் ஒரே குதூகலமாயிருந்தது. "சாஸ்திரி ஐயாவும் சாருவும் திரும்பி வந்துட்டாங்க" என்னும் செய்தி சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய தினமே பஜனை ஆரம்பித்துவிட வேண்டுமென்று நல்லான் வற்புறுத்தினான். சாயங்காலம் பஜனை ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் ஜனங்கள் ஏராளமாக வந்து கூடி விட்டார்கள். குப்பத்து ஜனங்கள் மாத்திரம்ன்றி, வ்க்கீல் ஆபத்சகாயமய்யர், சாருவின் பழைய வாத்தியாரம்மா முதலியோரும் வந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாயிருந்தபடியால், குப்பத்துத் தெருவில் திறந்த வெளியிலேயே பஜனை நடத்த வேண்டியதாயிற்று.

ஆனால், அன்று பஜனையில் சம்பு சாஸ்திரியினால் பாடவே முடியவில்லை. உணர்ச்சி மிகுதியால் அவருக்குத் தொண்டையை அடிக்கடி அடைத்துக் கொண்டது. மற்றவர்கள்தான் பாடினார்கள். காந்தி மகானுக்குப் பிரியமான கீதம் என்று பிரசித்தமான "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாட்டைச் சம்பு சாஸ்திரி பஜனையில் அடிக்கடி பாடுவதுண்டு. அதை மற்றவர்களுக்கும் கற்பித்திருந்தார். அந்தக் கீதம் இன்று பஜனையில் பாடப்பட்டபோது, சாஸ்திரி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

"எவன் பிறருடைய துக்கத்தை தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்துவிட்டு அதைப்பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.

"எவன் உலகில் பிறந்தோர் அனைவரையும் வணங்குவானோ, யாரையும் நிந்தனை செய்யமாட்டானோ, மனோவாக்குக் காயங்களைப் பரிசுத்தமாக வைத்துக் கொண்டிருப்பானோ, அப்படிப்பட்டவனுடைய தாயே தன்யையாவாள்.

"எவன் (விரோதியையும் நண்பனும்) சமதிருஷ்டியுடன் நோக்குவானோ, எவன் பரஸ்திரீயைத் தன் தாயாகக் கருதுவானோ, எவன் தன் நாவால் ஒரு போதும் பொய் பேச மாட்டானோ, எவன் பிறருடைய பொருளைக் கையால் தொடவும் மாட்டானோ, அவனே வைஷ்ணவன்.

"எவனை மோகமோ மாயையோ அண்டாதோ, எவனுடைய மனத்தில் திடவைராக்கியம் குடிகொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தைக் கேட்டதுமே அதில் ஆழ்ந்து மெய்மறந்து விடுவானோ, அவனுடைய சரீரம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் இருப்பிடமாகும்.

"எவன் லோபமும் கபடமும் இல்லாதானோ, எவன் காமத்தையும் குரோதத்தையும் விட்டொழித்தவனோ, அப்படிப்பட்ட உத்தமனைத் தரிசிப்பவனது எழுபத்தொரு தலைமுறையும் கரையேறிவிடும்"

இந்தக் கீதத்தைக் கேட்டு வருகையில் சம்பு சாஸ்திரிக்கு இன்றுதான் அதனுடைய உண்மையான பொருளைத் தாம் உணர்வதாகத் தோன்றியது. 'ஆகா! இந்தப் பாட்டில் சொல்லியபடி உண்மை வைஷ்ணவனாக நாம் என்று ஆகப் போகிறோம்? இந்த ஜன்மத்தில் அத்தகைய பேற்றை நாம் அடைவோமா! அம்பிகே! தாயே! இந்தக் கீதத்தில் வர்ணித்திருக்கும் குணங்களில் நூறில் ஒரு பங்காவது எனக்கு அருளமாட்டாயா?' என்று தமது இருதய அந்தரங்கத்தில் பிரார்த்தனை செய்தார்.




#5. கடலைத் தாத்தா தேர்தலில் அமோக வெற்றிய்டைந்தார்.

முதல் நாள் அவர் நகரசபைக் கூட்டத்திற்குச் சென்ற காட்சியைப் பெண்கள் எல்லோரும் வாசல் திண்ணையில் நின்றபடி பார்த்து ரசித்தனர். குழந்தைகள் சிமிண்ட் ரோடு வரையிலும் சென்று வழியனுப்பித்துவிட்டு வந்தன.

அன்று கிழவர் போட்டுக் கொண்டு சென்ற புதுச்சொக்காயும் புதுவேட்டியும் ஒரு வார காலத்தில் அழுக்காகிவிட்டன. அவற்றை இரவோடு இரவாகத் தோய்த்துப் போட்டு மறுநாள் காலையில் அவற்றையே மீண்டும் அணிந்துகொண்டு நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார்.

தேர்தல் மூலம் அவர் கையில் மிஞ்சிய காசு ஒன்றிரண்டு மாதங்களிலேயே கரைந்துபோய் விட்டது. ஆனால் அந்த ஒன்றிரண்டு மாதங்களில் அவரும் சரி, அவருடைய குடும்பத்தினரும் சரி, வாழ்க்கையை செம்மையாக அனுபவித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்நாட்களில் அவருடைய பேரக் குழந்தைகள் நல்ல நேர்த்தியான உடை அணிந்திருந்தனர். பையன் அன்றாடம் மீன் சந்தைக்குப் போய்வந்தான். கைக்குழந்தைகளை உத்தேசித்து இரண்டு ஆடுகள் வாங்கப்பட்டன. வீட்டிற்கு அவசியமான பாத்திரங்களும் வாங்கப்பட்டன. கிழவர் பீடியை மறந்து சுருட்டுக் குடித்தார்.

வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!

அவருடைய புதுச் சொக்காய் அன்றாடம் துவைத்துக் துவைத்துப் போட்டுக் கொண்டதாலோ என்னமோ வெகுவிரைவில் நைந்து விட்டது. இரட்டை வேஷ்டியிலும் பொட்டுப்பொட்டாகத் துவாரங்கள். வீட்டுச் செலவுக்காகச் சில பாத்திரங்கள் அடகு வைக்கப்பட்டன. நகரசபைக் கூட்டம் முடிந்து கிழவர் வீட்டுக்கு வருகிறபோது குழந்தைகளின் பசி அழுகை அவர் காதை அடைத்தது.

ஒருநாள் காலை கிழவர் தன்னுடைய பழைய மிட்டாய்ப் பெட்டியைக் கண்டெடுத்து அதைத் தூசி போக நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்தார்.

மறுநாள் காலை சட்டை அணியாத வெற்றுடம்புடனும், இடது கையில் மணியுடனும், முண்டாசு சுற்றிய தலைமீது மிட்டாய்ப் பெட்டியுடனும் அவர் குர்ரான் பள்ளிக்கூட வாசலை அடைந்த போது, 'கடலைத் தாத்தா வந்துட்டாரு டோய்!' என்று கத்திக் கொண்டே குழந்தைகள் அவரை வட்டமாக சூழந்து கொண்டன.

கடலைத் தாத்தா குழந்தைகள் முகத்தையெல்லாம் பார்த்து வெறித்தார். அவர் முகம் மலர்ந்தது. அவர் கண்கள் கலங்கின.

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

வெள்ளி, ஜூலை 28, 2006

Author & the Novel

புகழ் பெற்ற நாவல்களின் தொடக்கங்கள்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?


1. "தோஸ்த், ஆஜ் நெட் பிராக்டிஸ் ஹை. ஜரூர் ஆஜாநா", என்று நாஸிர் அலிகான் சொல்லிட்டுப் போனான். அந்த ஆண்டு கல்லூரி கிரிக்கெட் கோஷ்டிக்கு நாஸிர் அலிகானைத் தலைவனாக அறிவித்திருந்தார்கள். நாஸிர் அலிகான் ஒரு மொயினுத்தவுலா கோப்பை ஆட்டத்தில் பழம்பெரும் ஆட்டக்காரர்கள் மத்தியில் இடம்பெற்றுப் பத்தாவது நபராக மட்டையடிக்கச் சென்றாலும் பத்து நிமிஷத்திற்குள் முப்பத்தி மூன்று ஓட்டங்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்தான். நானூறு மாணவர்கள் படித்து வந்த அந்தக் கல்லூரியில் நாற்பது பேர் தைரியமாக கிரிக்கெட் ஆடவருவார்கள். அந்த ஆண்டு என்றில்லை, இன்னும் பல ஆண்டுகளுக்கு நாஸிர் அலிகான் காப்டனாக இருப்பான் என்பதில் ஆருக்கும் சந்தேகம் கிடையாது. மாலையில் ஆட்டம் பழகிக் கொள்ளும் போதுகூட சில்க் ஷர்ட்டும் ஃப்ளானல் பாண்ட்டுமாக வரும் நாஸிர் அலிகான் இதற்கு முன்னர் சந்திரசேகரனுடைய ஆட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியச் சந்தர்ப்பமில்லாதிருந்தும் அன்று அவனைக் கல்லூரி நெட் ப்ராக்டிஸுக்குக் கூப்பிட்டிருக்கிறான். நாஸிர் அலிகான் அவனிடம் சொல்லிவிட்டுப் போனபின் சந்திரசேகரன் சைக்கிளின் சக்கரங்களை அழுத்திப் பார்த்தான். நல்ல வேளையாக இரு சக்கரங்களிலும் காற்று இருந்தது.


2. அது வேறு உலகம். பூமிப் பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக்கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.

கருவேலமரம், பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூராள்கொடி முதலான வானத்துக்குக் கோரிக்கை வைக்காத தாவரங்களும் -

நரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் - கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண் மண்டலம்.

கரும்பாறையிலும் - சரளையிலும் - சுக்கான் கல்லிலும் முள் மண்டிய நிலங்களிலும் தொலைந்துபோன வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் பொழப்பு''.


3. வெளிச்சம் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும்.

வாசலைப் பார்த்தார் ஆனந்தரங்கர். இருட்டைப் பிசைந்து நீர் ஊற்றி மெழுகியது போல கருத்திருந்தது வாசல். உள்ளே வலப்பக்கத்து பூஜை அறையிலிருந்து, மெல்லிசாக வெள்ளை மஸ்லின் துணி விரித்தாற் போல, சாம்பிராணிப் புகை பரவிக் கூடத்துக்கு வந்த்து. அத்துடன் முத்துக்கொட்டை, வேம்பு, எண்ணெய், கடலை எண்ணெய், நெய் கலந்து எரித்த விளக்கிலிருந்து எழுந்த நெய் மணம் சுகமாய்ப் பரவியது. பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்ட ஆளுயரக் கடிகாரத்தில் மணி நாலு ஐம்பது ஆகியிருந்தது. ஆனந்தரங்கர் ஸ்நானம் முடித்து பூஜை புனஸ்கார நியமங்களையும் முடித்து வர்த்தகர்களுக்குரிய நீண்ட வெள்ளை அங்கியும், இடைக் கச்சையில் செருகப்பட்ட வாளும், தலைப்பாகையும் அணிந்து கூடத்து ஊஞ்சலின் மேல் மான் தோல் விரித்து அமர்ந்திருந்தார்.

மங்கைத்தாயம்மாள், பின்கட்டையும் கூடத்தையும் இணைக்கும் கதவை ஒட்டி நின்று தலையை நீட்டிக் கணவரை அவதானித்தாள். அவள் அதற்குள் ஸ்நானம் முடித்திருந்ததைத் தோளில் புரண்டு விழுந்த ஈரக் கூந்தலும், அதன் காரணமாய் நனைந்திருந்த ரவிக்கையும் உணர்த்துமாயிருந்தன. அக்னி நாக்கு மாதிரி நெற்றியில் மெல்லிய சூர்ணம் இட்டிருந்தாள். மாலை ஆகாச நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். தொண்டையைச் செருமிக்கொண்டு அம்மாள் சொன்னாள்.

"புது கவர்னரை வரவேற்கப் போக வேணும் என்று வார்த்தை வந்ததே!"


4. இந்தச் சின்ன 'டாய்லெட்டில்' உட்காரும் போதுதான் இந்த வீடு பெரிதாகத் தெரிகிறது.

ஒன்றையொன்றுடன் ஒப்பிடும் வகையில்தான், குளிக்கும் தொட்டியிலிருந்து, விஞ்ஞான உண்மை, நிர்வாணமாக வெளிவந்திருக்கிறது.

மரத்தடியில் இளைப்பாறும்போது, அதுவே ஆப்பிளாக விழுந்து, தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மரத்தடியில், தத்துவ த்ரிசனமும் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால்,

இது போன்ற சின்ன டாய்லெட்டிலிருந்தவாறு, யாரேனும் ஒரு புதிய சிந்தனையை உலகத்தோடு பகிர்ந்து கொண்டதாக சரித்திரம் உண்டோ?

'க்ளாஸ்டர் போஃபியா' ஏற்படமாலிருந்தால் சரிதான். நான் வார்ஸாவுக்கு வந்த புதிதில், வீட்டைப் பற்றிய ஏமாற்றம் என் முகத்தில் தெரிந்தபோது, 'சோஷல்பிரோ' விலிருந்த அந்த அழகான பெண், முகத்தை சற்று சாய்த்து, புன்னகை ஒளிர சொன்னாள் - 'விசிட்டிங் ப்ரொஃபஸர்'களுக்கு, அவர்கள் கிழக்கோ, மேற்கோ, எங்கிருந்து 'விசிட்' செய்தாலும் சரி, வெளி நாட்டினர்களுக்கு கொடுக்கப்படும் வீடுகளில், என் வீடுதான் பெரிது என்று.

மேஜையின் இழுப்பறையிலிருந்து ஓர் ஆப்பிளை எடுத்துக் கடித்துக் கொண்டு அவள் இன்னுமொன்றும் சொன்னாள். 'இது உங்களுக்குச் சிறிய வீடாகத் தோன்றினால் வார்ஸா பல்கலைக்கழகப் போலிஷ் ப்ரொஃபஸர்க்ளுடைய வீடுகளைப் போய்ப் பாருங்கள். உங்கள் வீடு, எவ்வளவு பெரிதென்று உங்களுக்குத் தெரியும்!'


5. குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள்.

ராணி சொன்னாள்.

ராஜா பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை நிறைத்தபடி நிமிர்ந்து பார்த்தார்.

அழகான ராணி. இளவயசு கடந்து கொண்டிருக்கிறது. முலைகள் இறுக்கம் தளர்ந்து தொங்க ஆரம்பித்து விட்டன. அரைக்கட்டு பெருத்துக் கொண்டு வருகிறது.

ஆனாலும் ராணி. ஐம்பதுகளின் அந்தப் பக்கம் இருக்கும் தன்னோடு ஒப்பிட்டால் இன்னும் சின்னஞ் சிறிசு தான்.

அவள் குளிக்கும்போது ஏன் பார்க்க வேண்டும் ?

தான் இதுவரை அவளைக் குளியலறையில் கதவைத் திறந்து போய் ஒரு தடவை கூடப் பார்த்தது இல்லை என்பது நினைவுக்கு வரச் சோழிகளைத் தரையில் பரத்தி வைத்தார் ராஜா.

அதில் ஒன்று உருண்டு வாசலுக்கு ஓட ஆரம்பித்தது.

முன்னோர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சோழிக்குள் அவர்களில் யாரோதான்.

ராஜாவுக்கு இந்தக் குறுக்கீடு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தரங்கமாகப் புருஷனும் பெண்சாதியும் கதைத்துக் கொண்டிருக்கும்போது முன்னோர்கள், பின்னோர்கள், அரண்மனை ஜோசியன், மிளகாய்மண்டிக்காரன், சேடிப்பெண் யாரும் வருவது முறையானதில்லை.

பின்னோர்கள் சொன்னால் கேட்பார்கள். உடனே புரிந்து கொண்டு அவர்கள் காலத்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்.

முன்னோர்கள் விஷயத்தில் இது எடுபடாது. அவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பவர்கள். எந்த நிமிடமும் எங்கேயும் நுழைந்து அதிகாரமாக ஆலோசனை சொல்லி, பயமுறுத்தி, நம்பிக்கை அளித்து வழி நடத்திப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள்.

ராணி குளிப்பதை யாரோ பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. ஏதோ தலை போகிற விஷயம் இருப்பதாக வெள்ளைச் சோழியில் புகுந்துகொண்டு அறிவிக்கிறார்கள்.

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

Cartoons on Middle-East Situation - Israel vs Hezbolla in Lebanon

கார்ட்டூன்களுக்கு விளக்கம் எழுதுவது நல்ல கவிதைகளுக்கு பதவுரை எழுதுவது ஒப்பானது. கவிஞன் சொல்ல நினைத்ததை தவறாகப் புரிந்து கொள்வதால் படைப்பாளிக்கும், தனக்குப் புரிந்தற்கேற்ப வளைத்துக் கொள்வதால் வாசகருக்கும், அனுபவிக்க வேண்டிய காபியின் தன்மையை எழுத்தில் கொணருவதால் ஏற்படும் சிதைவால் பொறிப்புரையாளருக்கும் முறையே கோபமும், ஆதங்கமும், அயர்ச்சியும் தரவல்லது. இருந்தாலும், 'தமிழ்ப்பதிவுகள்' என்னும் இடுகுறிப்பெயருக்கேற்ப, சில உப-தலைப்புகள்.




  • அகிலமெங்கும் சுதந்திரக் காற்று வீசச் செய்வதுதான் என் தாரக மந்திரம் என்றவர், பாலஸ்தீனம், லெபனான் போன்ற தேர்தல் நடத்தும் நாடுகளையும் பாகிஸ்தான், ஜோர்டான் போன்ற சர்வாதிகார தேசங்களையும் பார்த்து குழம்புகிறார்.




  • ரூபிக் க்யூப் தெரியுமா?




  • ஹெஸ்பொலாவின் நிலை




  • லெபனானின் நிலை




  • இஸ்ரேலின் நிலை.




  • நாலு அமெரிக்கர்களுக்கு ஆபத்து என்றால் அணுகுண்டும் போடலாம். (அமெரிக்காவின் நிலை)




  • நிஜ நிலை.




  • ஈரானின் நிலை




  • ஐ.நா.வின் நிலை.




  • சன்னி நாடுகளின் நிலை




  • அடுத்த தலைமுறையின் நிலை




  • இரண்டு கழுகுகள் யார் என்பதுதான் எல்லா விவாதங்களின் மையபுள்ளி (அல் க்வெய்தாவும் ஈரானும் (அல்லது) அமெரிக்காவும் இங்கிலாந்தும்)




  • இது ஒரு சக்கரம் அய்யா... இதைத் தடுக்க முடியாதய்யா!? பூக்களைப் பறிக்காதீர்கள்.



    | |

  • வியாழன், ஜூலை 27, 2006

    Name the Author & the Novel

    புகழ் பெற்ற நாவகளின் தொடக்கங்கள்.

    என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

    1. அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். மொத்தம் ஒரு ஓவர்தான் பாக்கியிருக்கிறது. எடுக்கவேண்டிய ரன்களோ பதினெட்டு. விக்கெட்டு ஒன்பது விழுந்து விட்டது. கடைசி ஓவர் போடப் போவது யார் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். திடீர் என்று பெவிலியனுக்குச் செய்தி போய் இம்ரான்கான் வருகிறான். எப்படி வாளாடி டீமில் இம்ரான்கான் வரமுடியும் என்று காப்டனைக் கேட்கிறான். அதற்கு அவன், அப்படித்தான் அது, இப்போது புதுசா ரூல் கொண்டு வந்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கடைசி ஓவரில் போடலாம் என்று வந்திருக்கிறது என்கிறான்.


    2. ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோறு வயது நடந்து கொண்டிருந்தது.

    தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அலைந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருந்தன. காலை நேரத்தில் அவை மண்சுவர்களை விட்டு மெதுவாகக் கீழிறங்கித் தலையைச் சிலுப்பியபடி தெருவின் நீண்ட தனிமையில் பயத்தோடு, கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தா. அவன் வீட்டு வேம்படியில் இருந்த எறும்புகள் நேற்றோடு முற்றாக வெளியேறிப் போய்விடன. எறும்புகளின் சரசரப்பு ஓசையும் அற்றுப் போனபிறகு மரத்தில் காற்று துளிர்ப்பது கூட ஒடுங்கி விட்டது. இலைகள் தலைகவிழ்ந்தது போல நிசப்தித்துவிட்டன. எறும்புகள் எங்கே செல்கின்றன என்றே தெரியவில்லை.


    3. கணேசன் கண் விழித்ததும் அவன் முதலில் பார்த்த பொருள் ஒரு நட்சத்திரம். ஜன்னலுக்கு வெளியே வெகு தொலைவில் அற்புதமாய் மின்னிக் கொண்டிருக்கிற விஷயம்.

    எழுந்தவுடன் நட்சத்திரம் பார்ப்பது நல்லதா, கெடுதலா? உள்ளங்கையைப் பரக்கத் தேய்த்துப் பார்ப்பது தான் கணேசனுடைய தினசரி வழக்கம். அப்படி பார்க்காத நாளெல்லாம் சிரமப்படுத்தும் என்பது தீர்மானம். ஆனால், இன்றைக்கென்னவோ எழுந்தவுடன் முதலில் பார்த்த பொருள் நட்சத்திரம்தான்.

    புலருமுன் தெருவில் விளக்கணைத்து விட்டார்கள். அறைக்குள்ளே இருட்டு கனமாக அழுந்திக் கொண்டிருக்க நட்சத்திரம் சிரித்துக் கொண்டிருந்தது. வெகு தூரத்தில் சிவப்பாய், கனமாய், அழகாய் அந்தச் சுடர் மின்னிக் கொண்டிருந்தது. பிசுபிசுத்த இமைகளூடே ஒளிக்கதிரால் முத்தமிட்டது. இத்தனை அழகாய், அமைதியாய் சிரிக்கிற சுடர் கெடுதலைத் தருமா? கணேசன் விழிகளை அசைக்கிற பக்கமெல்லாம் அதுவும் நகர்ந்த்து. விழிகளைத் திறந்ததும் ஜன்னலுக்கப்பால் வெகு தொலைவில் போய் ஒட்டிக் கொண்டது.

    "இதென்ன விளையாட்டு உனக்கு. சாவித்திரி மாதிரி?"


    4. மெலிந்த மேகங்கள் தெருவிற்கு மேலே கடந்து போயின. அதற்கு எதிர்த்திசையில் கூட்டமாக விரைந்து பயணிப்பதாய் பிரமை கொடுத்த நட்சத்திரங்கள் நுட்பமாகத் துடித்தன. மண்ணிலிருந்து எதையோ கவர மாமரத்தின் புல்லுருவிக் கொடிகள் ஊசலாடித் தொங்கின. வேப்பம்பழத் தோல்களுக்குள்ளிருந்து வெளியேறியிருந்தன சிற்றெறும்புகள். வேம்பின் அடர்ந்த கிளைகளொன்றிலிருந்து பால் கசிகிறது கையறு நிலைக்கண்ணீர் போல. மரத்தின் இருட்டந்தரங்கத்தில், உச்சிப்பாதுகாப்பில் வழிகிறது. யாரும் அறிந்திருந்தால் அப்போதே அது மாரியம்மனாயிருக்கும். அடிமரத்தில் மஞ்சள் பாவாடை கட்டப்பெற்றிருக்கும். தொழ வந்திருக்கும் பெருங்கூட்டம். திண்ணைச் சுவருக்கும் ஓட்டிற்குமான இடைவெளியில் பெரியண்ணன் எப்போதோ கோந்து தயாரிப்பதற்காக, முருங்கைப் பிசினில் நீர் ஊற்றி ஊற வைத்திருந்த தகர டப்பாவிற்குள்ளிருந்து மீள முடியாமல் அமிழ்ந்தது பாச்சை. வேம்பையும் வீட்டுத் திண்ணை உத்தரத்தையும் பிணைந்திருந்த கம்பிக்கொடியில் உலர்ந்தது வேஷ்டி. தென்னங்கீற்றுகளில் நிழல்கள் வேஷ்டியில் விழுந்து விரல்களாக முறுக்கிக் கொள்கின்றன். பிசைந்து கொண்டு பிரிந்து கூடி நடுங்குகின்றன.

    திண்ணையில் படுத்திருந்த பெரியண்ணனின் கால்களை மடியில் வைத்து அம்மா தடவிக் கொடுத்தாள். பெரியண்ணன் பேச இயலாதிருந்தான். கூர்ந்தொளிந்து துலங்கியது பார்வை. தாவித்தாவி அலைக்கழித பார்வை அம்மாவின் முகத்தில் நிலைத்தது ஏக்கமாக. கசங்கிக் கிழிந்து தொய்ந்த தளிரைப் போல உடல் முழுதும் முற்றும் சோர்ந்திருந்தது. அக்கா, அவன் தாகத்திற்கு குளுகோஸ் கரைத்த சுடுநீரை ஸ்பூனல் புகட்டினாள்.


    5. எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. கலியாணப் பந்தலைப் பார்த்தால் சிரிப்பு. மணமகள் தலைகுனிந்து நாணத்திலும் அடக்கத்திலும் முழுகிப் போய் உட்கார்ந்திருக்கிறாள். அதைப் பார்த்தால் சிரிப்பு. அகல மார்பும் இடைச்சரிவும் வழவழத் தோலுமாக, மணமகன் அக்னியில் நெய்யை வார்க்கிறான். அதைப் பார்த்தால் சிரிப்பு. இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற கிழவர்களையும் நடு வயதுக்காரர்களையும் பார்த்தால் சிரிப்பு. இத்தனை இரைச்சல்களையும் கவனிக்காமல், சீவாளியைக் குழந்தைக் கடியாக் கவ்விக் கொண்டு, ஆகாசத்திற்கும் பூமிக்குமாக நாயனத்தை வீசி வளைத்துக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பார்த்தால் சிரிப்பு. எதற்கு 'உம்'மென்று இந்த முகம்! இந்தக் கன்ன உப்பல்! நாயன் துவாரங்களை இத்தனை கண்ணும் கருத்துமாகத் தடவி, எந்த ஸ்வர சுத்தத்துக்கோ பயந்து கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தால்... கலியாணத்துக்குக் கூடியிருக்கிற இத்தனை சாயல்களை, பற்களை, நெற்றிகளை, கால்களை, சிரிப்புகளை, புருவந்தூக்கும் கவலைகளை, முகங்களில் படர்ந்திருக்கிற பூசணி வெள்ளைகளை, தானே பேசுகிற குழந்தைகளை, வருடங்கள் கழிந்து சந்திக்கும் தாயாதிகளை - ஒன்றையும் பார்க்காமல் ஏன் இப்படி கண்ணை மூடி நாயனத்தில் வதை கொள்ள வேண்டும்?



    கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.




    | |

    திங்கள், ஜூலை 24, 2006

    Train, Sun, Big Dig, Wiki

    கிழிமுறி உதிர் ஏடல்கள்

    சன் டிவியில் 'லஷ்மி' ஆரம்பித்திருக்கிறது. ஹிந்தி சூப்பர்மேன் 'கிர்ரிஷ்' போல் மதங்கொண்ட யானையை நிறுத்தாமல், அறிவியல்பூர்வமாகக் கையாண்டதாக காண்பித்தார்கள். குஷ்புவை சின்னத்திரையில் 'குங்குமம்' சீரியல் மூலம் அறிமுகப்படுத்திய சுஜாதா விஜயகுமார் தயாரிப்பு. தற்போதைய வேலையை விட பெரிய வேலை கிடைத்தால், நிறைய சம்பளத்துக்கு ஜாகை மாறுவது போல் 'செல்வி' சீரியலை இயக்கி வந்த சுந்தர் கே விஜயன் இங்கே குதித்து விட்டார்.

    தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் ஆரம்பம் விறுவிறுப்பாய் இருக்கும். புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆவார்கள். அவசரம் காட்டாத நிதானமாக படப்பிடிப்பு. தொழில் சிரத்தையோடு கூடிய பயம். புதுமுக எழுத்தாளராக தேவிபாலா இல்லாவிட்டாலும், டி.ஆர்.பி. ரேட்டிங் குதிரையில் முந்த வேண்டிய அவசியம்.

    ரஜினி குதிரையைப் பற்றி சொன்னவுடன், எந்த ஒப்புமைக்கும் ரேக்ளா ரேஸ் நினைவுக்கு வருகிறது. 'எனக்குப் பிடித்த பாடலில்' ராஜப்பா வந்திருந்தார். முதல் பாடல்: 'பொதுவாக என் மனசு தங்கம்'

    'பிறந்த ஊருக்கு புகழைத் தேடு
    வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
    நாலு பேருக்கு நன்மை செஞ்சா'
    துள்ளல்

    சாந்தோம் பள்ளிக்கும் செயிண்ட் பீட்ஸ் பள்ளிக்கும், சென்னையில் எப்போதும் போட்டி நிலவும். பக்கத்து பேட்டை செயிண்ட் ஆண்டனி முதல் லேடி சிவசாமி வரை பாதுகாத்து வீட்டில் சேர்த்து விடுவதில் ஆரம்பித்து, ஷூட்டிங் நடப்பது வரை எதிரும் புதிரும் அக்னி நட்சத்திரங்கள். 'அன்புள்ள ரஜினிகாந்த்' ரஜினி அங்கிள் எடுத்தது எங்க ஏரியா என்றால், 'படிக்காதவ'னின் 'ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி'யில் வருவது செயிண்ட் பீட்ஸ். அந்தப் பள்ளியில் படித்தவர்கள் ரஜினியை முதுகில் குத்தியவர்கள் (ரஜினியின் தம்பி வீட்டோடு மாப்பிள்ளை ஆக சென்று விடுவார்) என்று சண்டைக்கு சென்றோம்.

    இரவு வீட்டுக்குத் திரும்பும் இரயிலில் மீண்டும் ஏசி ரிப்பேர். இந்தியாவாக இருந்தால், 'இது மட்டும் அமெரிக்காவாக இருந்தால்' என்று புலம்பி தீர்த்திருக்கலாம். பாஸ்டனிலும் ஊழல் அதிகம். பாலம் கட்டுவதில் காசு பார்ப்பது போல் பில்லியன் டாலர் சாலை அமைப்பதில் சரிவர முடிக்காமல், கட்டி முடித்த சில வருடங்களுக்குள் மழைத் தண்ணீர் உள்புகுவதும், ஆங்காங்கே இடிந்து விழுவதுமாக லஞ்சத்தைக் காட்டிக் கொடுக்கிறது. விசாரணை கமிஷன் போட்டிருப்பதாக செய்தித்தாள் தலைப்பு. 'நான் பொறுப்பில்லை' என்று கவர்னருக்கு நிற்கும் இருவரும் பொதுவாக ஒருவரை நோக்கி குற்றஞ்சாட்டுகிறார்கள். அரசியல்வாதிகள் எங்கும் கூட்டுக் களவாணிகள் என்னும் அக்மார்க் நடுத்தர வர்க்க ஓட்டம் வருகிறது.

    காசு வாங்கியும் குளிர்சாதனத்தை பழுது பார்க்காத கருமி ஊர். தூக்கம் வரவில்லை. மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனை, என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசி பகை வளர்த்து விரோதிகளை வளர்ப்பதுதான் நான் இணையத்தில் மறுமொழியாக செய்து வருகிறேனோ என்று இருவுள் வாயில் பயணத்தில் யோசித்து வந்தேன். அதன் பிறகு, வலையின் மூலம் புதிய நண்பர்களை சந்தித்தோம். அவர்களுடன் தானே மோதி வருகிறோம். நிஜ உலகத்தில் இருக்கின்ற பிற தொடர்புகளுக்கு எதுவும் பாதகமில்லையே என்று தேற்றிக் கொண்டேன்.

    மாலன் முன்பொரு கட்டுரையில் என்னைக் குறித்து எழுதியிருந்தது போல், எந்த ஏடலுக்கும் ஒரு மாற்றுப் பார்வை வைத்துக் கொண்டு விவாதிக்கும் அன்பர் என்னும் பிம்பத்துக்குள் விழாமல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது.

    'தேவர் மகனை' மீண்டும் பார்க்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்கு நடக்கும் உரையாடலில், 'போயிடறேன்பா' என்று தப்பிக்க பார்க்கும் கமலைப் பார்த்து சிவாஜி, 'அய்யா, விதைச்சவன் என்னிக்காவது மரம் வளர்ந்து பயனை அனுபவிக்கிறானா? எங்க பாட்டன் வெதைச்சத நான் பழமா சாப்பிடறேன்... இங்கே நெல் விளைவிச்சு, உன்னை லண்டனில் படிக்க வச்சதுக்கு எதுக்காக?' என்பார்.

    ரொம்ப யோசிக்காமல் தோன்றியதில் விக்கிப்பீடியா என்பது விதை. உடனடியாக பலன் கிடைக்காது. ஆனால், சிந்தாமல் சிதறாமல், பூத்துக் குலுங்கும் தோட்டம்.

    தகவல் உதவி: சீரியலுக்கு வருகிறார் மீனா :: மு.மணி:



    | |

    Israel vs Lebanon with Hezobollah, Syria, Iran et al

    இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு சோதனைச் சாவடி தேவைப்பட்டது. ஸ்பெயினில் நடந்த உரிமைப் போராட்டத்தில் ஜெர்மனியின் புஜபலத்தைக் காட்டி சோதித்து, இரண்டாம் உலகப் போருக்கு கால்கோளிட்டார். ஈரானுக்கும் தன்னுடைய இராணுவ மிடுக்கை பரிசோதிக்க ஆசை. ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் அப்பாவிகளைக் கொன்று தளவாடங்களை production environment-இல் விட்டுப் பார்த்திருக்கிறார்.

    ஈரானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எதுவும் ஜி-8 மாநாட்டில் எடுக்கக் கூடாது; என்ன வழி என்று யோசித்தது ஈரான். அடியாள் ஹெசபொல்லாவை அழைத்து கண்ணீர்ப் புகை குண்டுகள் போல் இஸ்ரேலிய படைவீரர்களைக் கைப்பிடித்தது.

    இஸ்ரேலில் இராணுவத்தில் சேருவது இந்தியாவைப் போல் விருப்பப் பாடம் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் போல் கட்டாயப் பாடம். வயதுக்கு வந்தவுடன் வாக்களிக்கிறார்களோ, இல்லையோ, இராணுவத்தில் பணிபுரிய வேண்டும். ஏழை உயிர்தானே... போனால் போகிறது என்று பொதுஜனம் விட்டேத்தியாய் விடாமல், செய்தித்தாள் படித்து விட்டு எல்லையில் இருவர் இறப்பு என்று புறந்தள்ளாமல், 'நம்மில் ஒருவர்' என்று ஒவ்வொரு இஸ்ரேலியும், நமக்கும் இந்த மாதிரி நிலை வந்திருக்கலாமே (வரலாமே) என்று எண்ணும் சமூகம்.

    இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா குரல் கொடுக்கும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது. லெபனானும், பாலஸ்தீனமும் தேர்தல் நடத்தும் சுதந்திர நாடுகளாக இருப்பது தான் அமெரிக்காவையும் அதன் தலைவர் புஷ்ஷின் 'எங்கெங்கு காணினும் சுதந்திர நாடடா' கொள்கையையும் அசைத்துப் பார்க்கும் என்றும் நம்புகிறது. ஈராக் போருக்கு கூறப்படும் காரணங்கள் இந்த இரட்டை நிலையினால் உலக அரங்கில் தவிடு பொடியாகியுள்ளது.

    2000-த்தில் லெபனான் ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விலக்கியவுடன், ஜனநாயக முறையில் போராளிக் குழுவான ஹெசபொல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகும் லெபனான் இராணுவம், லெபனான் எல்லையருகே நிறுத்தப்பட முடியவில்லை. சிரியாவின் ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்தது. லெபனானின் பிரதம மந்திரியே ஹெசபொல்லாவை 'எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெசபோல்லா, தயவு செய்து தங்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிட வேண்டும்' என்று வேண்டுகோள் வைக்குமளவு கையாலாகதவராக தன்னை நிலைநிறுத்தி (ப்ரொஜெக்ட்) செய்து கொள்கிறார்.

    கோலன் ஹைட்ஸின் ஷாபா ஃபார்ம்ஸ் தொடர்பாக சிரியா இன்னும் கோபத்தில் இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்குப் பின் தேர்தலில் வென்று அரியணை ஏறிய பிறகும், ஹமாஸின் நடவடிக்கைகளில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. இரகசியமாக பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாய், இஸ்ரேலுக்குள் கன்னம் போடுவது, குண்டு வெடிப்பது என்று ஹமாசும்; பாலஸ்தீனத்துக்கு நியாயமாக சேரவேண்டிய அவர்களின் வரிப்பணத்தைக் கொடுக்காமல் அடாவடி செய்வது, அன்றாடம் வேலை செய்தவர்களை உள்ளே நுழைய விடாமல் தினக்கூலியில் கைவைப்பது என்று இஸ்ரேலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

    இது நவீன போர்களின் காலம். ஈராக் போரில் சதாம் தலைமை இல்லாவிட்டாலும், அந்த நாட்டு இராணுவமே பொதுமக்களை பாதுகாக்க நினைத்தாலும், கெரில்லா போரில், அமெரிக்காத் தோற்றுப் போய் பல ஆண்டுகள் கடந்து விட்டது. (ஈராக் - அமெரிக்க போர் குறித்து இந்த வருட ஆரம்பத்தில் எழுதிய ரிப்போர்ட்)

    'கடவுளின் கட்சி'க்கு கிட்டத்தட்ட 6,000 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை அழிப்பது இஸ்ரேலுக்குப் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், தப்பித்துப் போவது ஒரு சிலரேயானாலும், ஈராக்கை போல் புதிய போராளிகளை நியமிப்பது, குடும்பத்தை இழந்தவர்களுக்கு தூபம் போட்டு தீவிரவாதி ஆக்குவது, கொரில்லா யுத்தத்தைத் முன்னெடுத்து செல்வது போன்றவற்றை சளைக்காமல் தொடர்வார்கள்.

  • ஈரானின் தற்போதைய பிரதம மந்திரி Mahmoud Ahmadinejad-இன் 'நாஸி அடக்குமுறையே கிடையாது. யூதர்கள் பம்மாத்து செய்கிறார்கள்' என்று பொதுவில் பேசி, சிரியாவின் மூலமாக ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு - செய்யும் அரசியலையும்;
  • ஹமாஸ் வளர்வதால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கிப் போகும் சாத்தியக் கூற்றில், ரஷியாவை மீண்டும் ஆதிக்க சக்தியாக்கும் ப்யூடினின் திட்டத்தையும்;
  • மீசையில் மண் ஒட்டியதைத் தட்டிவிட இஸ்ரேல் தலைவர் Ehmud Olmert, 'தானும் அடித்து ஆட வல்லவன்' என்று நிரூபிக்கும் ஆண்மை பிரஸ்தாபிப்பையும்; சேர்த்துப் பார்க்காமல், 'இஸ்ரேலின் தற்காப்பு/பயங்கரவாதம்' என்று பொதுமையாக்க இயலாது.

    இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் தொலைதூரப் பார்வை இருக்கிறதா, வெற்றி பெறுமா என்பதைத்தான் - ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் இரானும், நிரந்த்ரப் பகை பாராட்டும் சிரியாவும், விஷயமே தெரியாமல் தாக்கிக் கொண்டிருக்கும் ஹிசபொல்லாவும் ஆராய வேண்டும். அமெரிக்காவைத் தாக்காத வரைக்கும் உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் அமெரிக்காவுக்கு கவலையில்லை. இரானிய் பிரதமருக்கும் இதே எண்ணம்தான். ஈரானை நேரடியாக பிறர் தாக்க முடியுமா, எப்படி தற்காத்துக் கொள்ள முடியும் என்று சோதனைச்சாலையாக லெபனானைப் பயன்படுத்துகிறார்.

    ஹெசபொல்லா என்னும் அண்டை வீட்டார் சொற்படி நடக்கும் முரட்டு குழந்தையைக் கட்டுப் படுத்த முடியாததால், லெபனான் தன்னுடைய வீட்டையே பாழாக்கிக் கொண்டிருக்கிறது.

    இந்த விவகாரம் குறித்து கிலோபைட் குவித்துக் கொண்டே போகலாம். நான் ஒத்துப் போகும், லாஜிக் உடைய எண்ணப் பதிவுகளை படிக்க கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சாலச் சிறந்தது:

  • New conflicts in an old war in the Middle East - The Boston Globe

  • Guardian Unlimited | Special reports | On the brink of chaos

  • Guardian Unlimited | Special reports | The war gets wider and worse


    இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்குமான பிரச்சினை குறித்து கீழ்க்கண்ட பதிவுகள் படிக்க கிடைத்தது:

    1. தமிழ் சசி

    2. ஸ்ரீகாந்த் மீனாக்ஷி

    3. முத்து (தமிழினி)

    4. வஜ்ரா ஷங்கர்



    இஸ்ரேலும் அதன் சுற்றுப்புறமும் தொடர்பான என்னுடைய முந்தைய பதிவுகள்:
    1. தி சிரியன் ப்ரைட் (திசைகள்)

    2. யாஸர் அராஃபத் (தமிழோவியம்)

    3. சண்டக்கோழி அமெரிக்கா :: Why We Fight (தமிழோவியம்)


    தொடர்பான தகவல்கள்:
  • Guardian Unlimited | Special reports | What the papers said

  • Fighting on Two Fronts

  • Welcome to World War Three — or as the neocons call it, World War Four

  • Dar Al Hayat - When is Terrorism Not Considered as Terrorism (Ayoon Wa Azan) :: (லெபனான் சார்பு கருத்தாக்கம்)

  • Israel’s Invasion, Syria’s War - New York Times

  • மத்திய கிழக்குப் பகுதியை நன்கு அறிந்த ஏழு வல்லுநர்களின் எண்ணக்கோர்வை

  • Watching, blogging ... bombing


    கார்டியன் நாளிதழ் :: Interactive guides
    இஸ்ரேலின் சரித்திரம் | ஜூன் 2006: காஸா நுழைவு | அஹ்மத் யாஸின் | ஜெனின் போர் | இஸ்ரேலும் லெபனானும் | ஹெசபொல்லா - லெபனான் : தற்கால நிகழ்வுகள்

    சமீபத்திய நிகழ்வுகள் - வரிசைப்படி
    1999 | 2000 | 2001 (1) | 2001 (2) | 2002 (1) | 2002 (2) | 2002 (3) | 2002 (4), 2003 | 2004 | 2005



    | |

  • ஞாயிறு, ஜூலை 23, 2006

    Sivaji Statue Opening Vizha

    சிவாஜி சிலைத் திறப்பு சன் தொலைக்காட்சியில் தொகுத்திருந்தார்கள். கவர்ந்த சில தருணங்கள்.

  • பங்குப் பெற்றோரின் பெரும்பாலானவர்களின் ஆடை வெள்ளை நிற சட்டை, வேட்டி. எங்கெங்கு காணினும் வெளுப்புதான்.

  • எல்லோரும் சோகமே உருவாய் குடிமுழுகிப் போனது போல் இருந்தார்கள். சாதனையாளரை கௌரவிக்கும் விழாவில் சந்தோஷமாகப் பட்டுப் புடைவையில் இருந்தவர் லதா ரஜினிகாந்த்.

  • சிவாஜியின் மனைவி கமலா மேடையேறாததற்கு பிரபு காரணம் சொன்னார். அண்ணன் இராம்குமார் முதல் வரிசையிலோ, அரங்கில் பேசாததற்கோ என்ன காரணம் என்று விளங்கவில்லை.

  • 'சந்திரமுகி'யில் ஜோதிகா பேய் போல் கண்களை உருட்டுவதற்கு சிவாஜியின் நடிப்பு உதவியிருக்கிறது. பாரதியாக சிவாஜி கனவு காணும் 'கை கொடுத்த தெய்வம்' படத்தின் 'சிந்து நதியின் மிசை' கை கொடுத்ததாக பி. வாசு சொல்லியிருக்கிறார். ஓவர் ஆக்சனுக்கு வஞ்சப் புகழ்ச்சி அணி.

  • பேச்சுக்களில் சாதாரணமாக கமல் தான் நிமிர்ந்து உட்கார வைப்பார். இன்று அது கேயெஸ் ரவிக்குமாருக்கு மட்டுமே சொந்தம். வெளிப்படையான எதார்த்தமான் பேச்சு. 'படையப்பா'வில் ரிகர்சல் எடுக்கும்போது உரத்த உச்சரிப்பு அதிகமாகப் பட்டிருக்கிறது. நேரில் சொல்லவும் பயமாய் இருந்திருக்கிறது. டேக் எடுக்கப் போவதற்கு முன்
    'அண்ணே... ஒரு வாட்டி என் காதோடு வசனத்தை மட்டும் சொல்லிடுங்களேன்!'

    சொல்லி முடித்தவுடன்...

    'இதை விட அதிகமாய் ஒரு இன்ச் கூட வேணாங்க'
    என்று சொல்லி விட்டு, இடத்தை விட்டு ஓடி, கேமிராவிற்கு அருகில் சென்று 'ஸ்டார்ட்' சொல்லி மறைகிறார்.

    சிம்மக்குரலோனை இயக்குவது எவ்வளவு நகாசான வேலை என்பதையும், நடிப்பைக் கறக்கும் இயக்குநரின் சிரமத்தையும் அலாதியாய் சொன்னார்.

  • சிவாஜியிடம் இருந்து நேரந்தவறாமையையும், 'இயக்குநர் சொல்வதை இம்மியளவும் மாறாமல் அப்படியே நடப்பதையும்' கற்றுக் கொண்டதாக விஜய் பகிர்ந்தார்.

  • சிவாஜியின் வரலாற்றில் துவக்கமும் (பராசக்தி சக்சஸ்) கலைஞரால் தான்; சுபம் போட்டு முடிப்பதும் (மெரீனா சிலை) கலைஞரால் தான் என்றார் பாக்கியராஜ்.

  • தமிழன் ஒவ்வொருவரிடமும் நால்வரின், நாலு தமிழர்கள் மட்டுமே தாக்கமாக இருக்கும் என்றார் வைரமுத்து:
    1. கருணாநிதி;
    2. எம். ஜி. ஆர்.;
    3. சிவாஜி &
    4. கண்ணதாசன்.
    தனக்குப் பொருத்தமானதை 'என் தாழ்மையான கருத்து' என்பது புத்திசாலியின் எழுத்து. தனக்கு உவந்ததை 'உலகத்தின் கருத்து' என்று genralize செய்வது புத்திசாலியின் மேடைப் பேச்சு.

  • கலைஞரைக் குறித்த விழாவா, சிவஜி சிலைத் திறப்புக்கான விழாவா என்று பேசிய ஒவ்வொருவரும் ஐயப்பட வைத்தாலும், விஜயகாந்த் சிவாஜியைத் தவிர்த்து கருணாநிதி துதியோடுப் பேச்சை முடித்துக் கொண்டார்.

  • கருத்துக் கேட்ட பலரும் சிவாஜியின் பிடித்த படப்பட்டியல் கொடுத்தார்கள். இது எனக்கு டக்கென்று வந்த படங்களின் பெயர்கள்:
    * பலே பாண்டியா,
    * சபாஷ் மீனா,
    * தேவர் மகன்,
    * திருமலை ரகசியம்,
    * தூக்கு தூக்கி,
    * உத்தம புத்திரன்,
    * திருவிளையாடல்,
    * பராசக்தி,
    * திரும்பிப் பார்,
    * கப்பலோட்டிய தமிழன்,
    * விடுதலை

  • ரஜினியின் பேச்சு சிகரம் வைத்தாற் போல் சிறப்பாக வந்தது. எழுதி வைத்துக் கொண்டு படிக்காமல், குட்டிக் கதை, சுவாரசியமான மேற்கோள்கள் என்று இயல்பாய், ஆளுமையோடு வெளிவந்தது. மேடையிலேயே விஜயகாந்த்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி, தன்னுடைய அரசியல் திறமையையும் ஓரளவு காட்டிக் கொண்டார். 'அரசியல் ஒரு குதிரை; சினிமா ஒரு குதிரை' என்று ஆரம்பித்து குதிரைப் பந்தயமாக வருணித்து அலுக்காதமாதிரி பேசினார்.

  • பாண்டிச்சேரியில் பெப்ரவரி 12 சிவாஜியின் சிலையைத் திறந்திருக்கிறார்கள். சிவாஜி குடும்பத்தில் ஒருவரான கமல், நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணும் டாக்டர் கலைஞர், எல்லாராலும் பங்கேற்க இயலவில்லை.



    | |

  • வெள்ளி, ஜூலை 21, 2006

    Sheepy Fox Intelligence

    ஆடும் நரியும் - ஊன்விலைஞருடன்

    Sheepy Fox Intelligence :: PBF - The Perry Bible Fellowship - a comic strip by Nicholas Gurewitch

    எனக்குத் தோன்றியவை:

  • வாக்காளர்களும் வேட்பாளரும் - அரசியல் தலைவருடன்

  • கால்பந்து ரசிகர்களும் ஜிதானே & மாடேராசியும் - சூதாட்டக்காரருடன்

  • பக்தர்களும் ஆறுமுகச்சாமிகளும் - வலைப்பதிவாளருடன்

  • செய்திகளும் நானும் - CERT-IN (Indian Computer Emergency Response Team) உடன்

  • ரசிகர்களும் கமலும் - கந்துவட்டிக்காரர்களுடன்

  • பொதுமக்களும் தீவிரவாதிகளும் - அண்டை நாடுகளுடன்

    உங்களுக்குத் தோன்றிய பொருத்தங்களும் தலைப்புகளும் கசாப்புக்கடைக்காரனுடன் வரவேற்கப்படுகின்றன

    நன்றி: PBF comic strip | PBF - The Perry Bible Fellowship - Nicholas Gurewitch




    | |

  • வியாழன், ஜூலை 20, 2006

    Six Word Stories

    ஆறு வரிகளில் கதை சொல்ல அழைக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே. அவர் எழுதியது:

    ‘For sale: baby shoes, never used.’


    சுஜாதா 55 வார்த்தைகளில் சிறுகதை எழுத சொன்னது அந்தக் காலம். ஆறு வரி கதைகள் நிகழ்காலம்.

    என்னுடைய முயற்சிகள் சில:

  • வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.

  • தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.

  • "என்ன வேண்டும்?" 'புகழ்' "ஏன்?" 'அதுதான் தெரியவில்லை.'

  • கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.

  • சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.

  • ரயிலில் குளிரூட்டு சுணங்கல். வாயிற்கதவைத் திறந்தவனுக்கு மோட்சம்.

  • குண்டுவெடிப்பு - 250 இறப்பு: தலைப்புச்செய்தி. பட்டினி சாவு?


    Shamash Says... : "The Hemingway Challenge" வலைப்பதிவில் இருந்து சில ஆங்கில ஆறு வரிக் கதைகள்:

  • “Forgive me!” “What for?” “Never mind.” – John Updike

  • Eyeballed me, killed him. Slight exaggeration.-- Irvine Welsh

  • Satan- Jehovah- fifteen rounds. A draw. – Norman Mailer

  • I saw. I conquered. Couldn’t come. - David Lodge

  • Oh, that? It’s nothing. Not contagious.- Augusten Burroughs

  • She gave. He took. He forgot – Tobias Wolff.

    வந்தியத்தேவன் முன்னர் எழுதிய 55 வார்த்தை கதைகள்: தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன் :: வீட்டுக்கு வீடு | நிதர்சனம் | எங்கள் அண்ணா | தனயன்


    | |

  • Blog Imsai Arasan

    இம்சை அரசன் Web 2.0 இந்திய தகவல் தொடர்புத் துறை

    தமிழோவியத்திற்கு நன்றி.

    மத்திய விஜிலன்ஸ் துறை (சி.வி.சி.) வாயிற்காவலன்: "மன்னா, நமது ஒற்றன் வந்திருக்கிறான்."

    இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சுயாநிதிகாரன்: "உங்களின் ஒற்றன் எப்போதுமே தாமதமாகத்தான் வந்து சேர்கிறார். கூகிளை யானைக் காலில் கட்டி இழுக்க வைத்து மண்டியிட வைத்த சீனாவும், தனக்கென புது இராஜபாட்டையை உருவாக்கிய ஜெர்மானியும், இணையத்தைக் கட்டுப்படுத்திய பிறகு நெட்ஸ்கேப் ஆமை போல் 56 கேபிபிஎஸ் நடை பயின்று வந்து சேர்கிறார் !"

    இம்சை அரசன் Web 2.0 மன்னாதி மன்னர் தன்தலையாட்டி சிங்குச்சா: "அவன் மைக்ரோசா·ப்ட் போன்றவன். ஆப்பிள், சன் என்று பெரும்புள்ளிகள் எதை செய்தாலும் சிறப்பாக சுட்டு, அதை நமக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் மைரோசா·ப்ட். இவனோ, சீனா, சவூதி அரேபியா, ஜெர்மனி என்று எவர் அரண் போட்டாலும், நமக்கேற்றவாறு spyware செய்பவன்."

    சுயாநிதி: "சி.வி.சி. காரரே, ஒற்றரை உள்ளே அனுப்பும்."

    சி.பி.ஐ. ஒற்றன்: "பஞ்சாப் சிங்கம், சீக்கியர்களின் தங்கம், கேம்ப்ரிட்ஜ் கலங்கிய, ஆக்ஸ்·போர்ட் அரவணைத்த, ராஜ்ய சபை நாயகன், இம்சை அரசன், Web 2.0, மன்னாதி மன்னர், தன்தலையாட்டி சிங்குக்கு வணக்கங்கள்."

    வெப் 2.0 மன்னர்: (மிரட்சியுடன்) "சென்ற முறை நான் நியமித்த சி.பி.ஐ. தலைவர் என்ன ஆனார்?"

    சுயாநிதி: "அவன் 'ரகு' வம்ச இணையத் தளத்திற்கு திரைப்படங்களின் உருக்கவர் பெடி அச்சுகளைத் தருவதற்கு தடை விதித்ததால், உங்களைக் கேட்காமல் நிலக்கரி அமைச்சகத்துக்கு அவனை மாற்றி விட்டேன்!"

    வெப் 2.0 மன்னர்: "என்னை மாற்றாத வரைக்கும் சரி சுயாநிதி! மூக்குப் பொடி மாதிரி என்னவோ சொல்கிறீரே? அது என்ன?"

    சி.பி.ஐ. ஒற்றன்: "மத்திய சென்னை மாணிக்கம், ரகு வலையின் இளவல், தொலைத்தொடர்பு காத்தோன், தகவல் மீட்டோன், அமைச்சருள் அதிசயம், அண்ணன் சுயாநிதி அவர்கள் - 'கேமிரா ப்ரிண்ட்'டைத்தான் தேமதுர திராவிடத் திருநாட்டின், 'ரகு வெப் 2.0' மொழியில், அப்படி சொல்கிறார் மன்னவா!"

    மத்திய தகவல்துறை (சி.ஐ.சி.) வாயிற்காவலன்: "மன்னரே, தங்களை உடனடியாக அழைத்து வர அரசியார் கட்டளையிட்டார்."

    வெப் 2.0 மன்னர்: "அச்சச்சோ! மார்க்கசீயத்து, காம்மனீசியத்து குறுநில மன்னர்களிடம் இருந்து கப்பம் கட்டுவதற்கு புதிதாக என்ன மிரட்டல்கள் வந்திருக்கிறதோ? போய் பார்த்து விட்டு வருகிறேன்"

    (மன்னர் மின்னலென மறைகிறார்.)

    சுயாநிதி: "சொல்லுமய்யா சி.பி.ஐ. என்ன புதிய விஷயம்?"

    சி.பி.ஐ. ஒற்றன்: "பாதுகாப்புத் துறைக்கு வேண்டிய தகவல்களுடன் வந்திருக்கிறேன். நமது நாட்டில் நான்கு மண்டபங்கள் இருக்கிறது."

    (திரை மரைவில் இருந்து 'முன்னேற்ற கழக லெனின்', சுருக்கமாக 'முக லெனின்' வெளிப்படுகிறார்.)

    முக லெனின்: "சென்ற ஆட்சியில் நான் நகரத் தந்தையாக இருந்த போது கட்டியதுதான் இந்த நான்கு மண்டபங்களும். சொல்லப் போனால், இன்னொன்று, பாதி முடிந்த தருவாயில் அப்படியே இருக்கிறது. நான் மீண்டும் நகரத்..."

    சி.பி.ஐ. ஒற்றன்: "என்னது இது? ஒற்றனுக்கே ஒற்றனா? இவர் எப்படி தடாலடியாக குதித்தார்?"

    சுயாநிதி: "மண்டபம் என்றால் அவர் வந்து விடுவார். அவர் ஹார்ம்லெஸ்... நீங்க கண்டினியூ பண்ணுங்க."

    சி.பி.ஐ.: "அந்த மண்டபங்களில், மக்கள் கூடிக் கூடி பேசிக் கொள்கிறார்கள். அவர்களில் சிலர் அரசியாரின் ஆதிக்கத்தையும் 'ரகு வெப்2.0' செய்யும் சென்ஸார்ஷிப்பையும் பட்டியல் இடுவதைத் தவிர வேறு வேலை இல்லாமல் அலைகிறார்கள்."

    சுயாநிதி: "யோவ்... நான் தான் தற்காலத் தமிழில் வூடு கட்டுவேன் என்றால், நீயும் ஏன் பன்னித் தமிழுக்கு மாறி விட்டாய்! இந்த மண்டபம் மேட்டரை அர்ஜுன் சிங்கிடம் சொல்லி விடுகிறேன். மண்டபத்தில் இட ஒதுக்கீடு என்று தாக்கீது கொண்டு வந்து விடுவார். அதன் பிறகு மண்டபம் முன்பு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் பார்த்துக் கொள்வார்."

    சி.பி.ஐ.: "அது அவ்வளவு சுளுவான முறையில் முடிக்க முடியாது. சிலர் சொந்த வீட்டிலேயே சந்திப்புகளைத் தொடரலாம்."

    சுயாநிதி: "நான் அன்றே சொல்லி இருக்கிறேன் எல்லாமும் ஒன்றாக ஆக்குவதுதான் நம் குறிக்கோள் என்பதால் நான்கு மண்டபத்தையும் இடித்து விட்டு 'ரகு வெப்'-இன் அரசாணி அரட்டை அரங்கத்திலேயே இனி கூட்டங்களை நடத்த சொல்லலாம்."

    (திரை)




    (அடுத்த நாள் அரசவை கூடுகிறது.)

    வெப் 2.0 மன்னர்: "நேற்று சி.பி.ஐ. என்ன சொன்னார்?"

    சுயாநிதி: "வழமையான பதிவுதான் மன்னவா. ஆராய்ச்சி மணி இல்லாததால் ஊரில் ஆராய்ச்சியாளர்கள் அதிகரித்து விட்டார்களாம். மீண்டும் குற்றங்குறையை நேரடியாக அறிய, நான்கு மண்டபத்திலும் மணிக்கூண்டு கட்டி, பொறியில் சிக்கும் எலிகளைப் போல் புலம்புபவர்களை அமுக்கிப் பிடிக்க வேண்டும்."

    வெப் 2.0 மன்னர்: "என்னவோ நடக்கட்டும்."

    சுயாநிதி: "யாரங்கே... உடனடியாகப் எலிப்பொறிகளைப் போன்ற மணி-மனிதப்பொறிகளைக் கட்ட டெண்டர் விடுக."

    (திரை)


    (இரண்டு மாதம் கழித்து)

    சுயாநிதி: "மனிதப் பொறிகளை வைப்பதை விட எலிகளை மண்டபத்தில் உலாவ விட்டாலே போதுமானது என்று திட்ட கமிஷன் ஆய்வறிக்கை சொல்கிறது மன்னா!"

    வெப் 2.0 மன்னர்: "அப்படியா? பிறகு ஏன் சென்ற மாதம் நான்கு மண்டபங்களைக் காவல் காக்கவும், மனிதப் பொறி அமைக்கவும், கூட்டங்களை வேவு பார்க்கவும் - மூன்று புதிய துறைகள் அமைக்கப்பட்டது?"

    சுயாநிதி: "அவை இந்த அறிக்கை சமர்ப்பிக்கப் படுவதற்கு முன் நியமிக்கப் பட்டது மன்னா."

    வெப் 2.0 மன்னர்: "இப்பொழுது அவை என்ன ஆகும்?"

    சுயாநிதி: "திட்டக் குழு அடுத்த ஆய்வறிக்கையை தயார் செய்யும் வரை 'எப்படி செயல்படும்' என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது மன்னவா."

    வெப் 2.0 மன்னர்: "மண்டபங்களின் உள் கட்டமைப்பை சீர்குலைக்க நிதி அமைச்சரிடம் பெற்ற நிதி எவ்விதம் செலவழிக்கப்பட்டது?"

    சுயாநிதி: "ஒற்றறிய ஆட்களை நியமித்தோம். முதல் மாத சம்பளத்துடன் மண்டபத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டு நம்மை வேவு பார்த்து அவர்களிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களே மன்னா"

    வெப் 2.0 மன்னர் தலை சுற்றி கீழே விழுகிறார். செய்தி எட்டியதும், அரசி கோனிகா சாந்தி பதைபதைத்து ஆசையுடன் சிம்ரன் போல் துள்ளி வருகிறார்

    கோனிகா சாந்தி: "சுயாநிதி... உம் சேவையை யாம் மெச்சினோம். பக்கத்து நாட்டு அரசன் உள்நாட்டு கலகத்தை விளைவிக்க குதிரை லாயங்களிலும் நெல் மணிக் கூடாரங்களிலும் தீ வைத்ததை மண்டபகப்படியாரிடம் இருந்து திசை திருப்ப சொன்னோம். அதன் மேல் சென்று மண்டபத்தையே காலி செய்ய வைத்த உம் தீரத்தையும் மதி நுட்பத்தையும் மெச்சினோம். அதற்கு பிரதி உபகாரமாக புதிதாக உம்மால் அமைக்கப்பட்ட மூன்று இலாகாக்களுக்கும் உம்மையே மந்திரி ஆக்குகிறோம்."

    சுயாநிதி: "இன்னொரு வரம் வேண்டுமே அரசியாரே?"

    கோனிகா சாந்தி: "மண்டபத்தில் பேசுவதைத்தான் ஒட்டுக் கேட்க லாயக்கில்லை. இங்கு மட்டும் நன்றாகக் கேட்பீரே? கேளுங்கள்!"

    சுயாநிதி வாயசைக்க 'பலாநிதி காரன்' பின்னணியில் குரல் கொடுக்கிறார்: "நான்கு மண்டபத்திற்கு செல்லும் வழியில், அகலபாட்டை நிறுவி, காசு வசூலிக்க 'ரகு வம்ச'த்திற்கு மட்டும் அனுமதி தர வேண்டும்."

    (திரை)



    | |

    புதன், ஜூலை 19, 2006

    Lets bash Thamizmanam (Again :-)



    தமிழ்மணத்தில் சூடு குறைந்து விட்டது.

    சிதம்பரத்துக்கு செல்லும் பேருந்தில் தமிழ் இடம் பெறுகிறதா என்பது முதல் வட இந்திய கங்கையைத் தலையில் சிவன் வைத்துக் கொண்டிருப்பதற்கான காரணம் வரை ஒரு பக்கம் அலசல் நடைபெறுகிறது.

    கால் மாறி ஐந்து சபைகளாக, காரைக்கால் அம்மையாராக பிகேப்ளாக்ஸ் முதல் அன்னியலோகம் வரை காலால் நடந்து, பல பதிவுகளிலும் நடனம் தரிசிக்கும் காலத்தில், நடிகர் திலகத்திற்கு சிலை வைக்கும் வாஸ்துவும் கவிதைகளும் Discovery அமைதியாய் தரையிறங்கியது போல் ஓரமாய் பயணங்களைத் தொடர்கிறது.

    நேற்றைய தினகரன் விளம்பரத்தில் கடற்கரையில் கற்புக்கு (தந்தை பெரியார்?), கவிதைக்கு (வீரமாமுனிவர்), உழைப்புக்கு (கண்ணகி), உண்மைக்கு (பாரதிதாசன்?), எளிமைக்கு (பாரதியார்?), குறளுக்கு (ஔவையார்?), ஒரு சிலை இருக்கிறது என்கிறார்கள். தமிழக கலைக் குடும்பத்தினர் (நான் சத்தியமாக உறுப்பினன் அல்ல) நடிப்புக்காக ஜெயலலிதா சிலை வைக்க சொல்லி இருக்கலாம்.

    ஒருங்குறியையும் தமிழ் எழுத்துருக்களையும் இன்ன பிற எண்ணற்ற இணையப் பயன்பாடுகளையும் அதிகரித்த உமர், திருநங்கை என்றவுடன் நினைவுக்கு வரும் icon லிவிங் ஸ்மைல் வித்யா, 'கள்ளன் பெரிசா... காப்பான் பெருசா?' என்பது போல் தொடர்ந்து தமிழ்மண குறிச்சொற்களில் இடம் பிடிக்கும் 'பார்ப்பன நாய்கள்' என்று சூடு தணிந்து கோடை குளிரில் வாடுபவர்களுக்காக...

    கிண்டி விட்டு சூடேற்றி குளிர் காய கேள்வி கேட்கிறான் இவண்! inblogs.netதமிழ்மணம் ஏன் பிகேப்ளாக்ஸை ஆதரிக்க வேண்டும்???

    மும்பை ரயிலில் குண்டுவெடித்த அமைப்புகளை ஆதரிக்கும், லஷ்கர் இ-தொய்பா போன்ற சக்திகளுக்கு நிதி திரட்ட உதவும், கார்கில் ஆக்கிரமிப்பு முதல் காஷ்மீரில் பேச்சுவார்த்தைக்கு சப்பைக்கட்டு போடும் பாகிஸ்தான் தளத்திற்க்குத்தான் தமிழ்மணம் ஆதரவுக் கரம் நீட்டுமா? அப்படியும் வலைப்பதிவுகளை படித்துத்தான் தீர வேண்டுமா?

    'ஆம்' என்றால் சரி... படிங்க. பின்னூட்டமும் இட்டுடுங்க :-)

    மற்றவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நல்ல விஷயம் ஒன்றை சொல்லி விட்டு ஓடிடறேன்:

    'உள்குத்து'', சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறது, ''போலிப் பின்னூட்டம்' போன்றவற்றை சில நொடிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, வம்ஸி மூத்தாவுக்கு ஒரு 'ஓ!' போடக்கூடாதா? வலைவாசிகள் என்ற முறையில் அது நம் கடமை இல்லையா?




    | |

    செவ்வாய், ஜூலை 18, 2006

    Sundara Aavudaiyappan

    சன் தொலைக்காட்சியின் 'வணக்கம் தமிழக'த்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கு முன் 'சிறப்பு விருந்தின'ராகக் கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் சுந்தர ஆவுடையப்பன்.

    அறிமுகம்

    Introduction in Sun TV's Vanakkam Thamizhagam :: this is an audio post - click to play



    பட்டிமன்றத்தில் இலக்கியமும் நகைச்சுவை கவன ஈர்ப்பும்

    this is an audio post - click to play



    குடிக்காதே தம்பீ குடிக்காதே by திருவள்ளுவர் in திருக்குறள்

    this is an audio post - click to play



    எயிட்ஸ் விழிப்புணர்வு உரை அனுபவங்கள & ஜனரஞ்சகமான பட்டிமன்ற தலைப்புகள்்

    this is an audio post - click to play



    காமத்துப்பால் ரசனை & குறளில் பாலியல் கல்வி

    this is an audio post - click to play




    | |

    Rameswaram - Vanakkam Thamizhagam

    சன் தொலைக்காட்சியின் 'வணக்கம் தமிழக'த்தில் பல மாற்றங்கள் இருப்பதாய் சொல்லிக் கொண்டாலும். 'சிறப்பு விருந்தினர்' பகுதியைக் கடாசி விட்டு 'அறிவியல் விளையாட்டு', 'ஊரும் சிறப்பும்' என்று நாள்தோறும் வேறொரு பகுதியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    இராமேஸ்வரம் சிறப்பு நிகழ்ச்சியில் இருந்து...

    Sun TV's New Vanakkam Thamizhagam Special on Cityscape :: Rameswaram - this is an audio post - click to play



  • இராமேஸ்வரத்தில் இஸ்லாமும் கிறித்துவமும்;
  • தனுஷ்கோடி சுனாமி பாதிப்பு;
  • கிணறு தீர்த்தங்கள்;
  • உலகின் முதல் மணல் சிற்பக் கலைஞன் - இராமன்
  • பாம்பன் பாலம்

    Rameswaram's Culture - Hinduism, Christianity & Islam :: this is an audio post - click to play





    | |

  • Aadu Puli Aattam in Chidambaram

    சிவனும் அடியாரும்




    ஆதிக்க வர்க்கமும் அடியாரும்




    ஆதிக்க வர்க்கமும் சிவனும்




    ஆட்டுவித்தார் ஆடாதார் யாரோ?



    விளங்காத படங்களுக்கு விரிவுரை தரும் பதிவுகள்:

  • மடத்துவாசல் பிள்ளையாரடி: சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!

  • கேவிஆர் பக்கங்கள்: சிதம்பரம் கோயிலின் புனிதம்

  • கார்த்திக் ராமஸ்

  • சுந்தரவடிவேல் » ஆடு

  • காலம்: கருடா சவுக்கியமா ?



    | |

  • Alter-Ego

    http://etamil.vox.com/library/post/alterego.html: இதன் பிரதியை அங்கும் காணலாம்.

    எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது என்று மாணிக்கம் சொல்லலாம். எனக்கு இன்னொரு பெயர் கிடையாது. ஆனால், ஈ-தமிழ் போலவே, சில பதிவுகளிலும் வேறு சமூக அமைப்புகளிலும் இருப்பதை சொல்லலாம். ஒரு பட்டியல் தொடங்கி முடிப்பதற்கு முன் இதற்கு காரணமாயிருந்த நியு யார்க் டைம்ஸ் கட்டுரையைப் படிக்கலாம்.

    யாஹூ 360, gather போன்ற தளங்களில் நண்பனாக சேர்த்துக் கொள்வதற்கும் கல்லூரி 'முஸ்தஃபா... முஸ்தஃபா'விற்கும் உள்ள தூரம் அதிகரித்துக் கொண்டே போனாலும், ஆத்மார்த்தமான உறவுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவது லாபமா/நஷ்டமா?

    என்னுடைய பிற வலைத்தடங்கள்:

    1. வோர்ட்ப்ரெஸ்ஸு : 'நண்பர்'களிடமிருந்து வரும் ஃபார்வர்ட் சிரிப்புகளையும், கவர்ந்த ஆங்கில கருத்தாக்கங்களையும் தொகுக்க உதவுகிறது.
    2. கேதரு : என்.பி.ஆர். கேட்கும் கும்பலிடையே உலவ உதவும்.
    3. வாக்ஸு : ப்ளாக்ஸ்பாட்டை பகிஷ்கரிக்கிறார்களாமே? என்னைப் படி; என் கருத்தை காதில் போட்டுக் கொள்.
    4. டெலிசியஸு : புத்தகக் குறிகளை அதி விரைவில் தொகுத்து வகைப்படுத்த கை கொடுக்கிறார்.
    5. ப்ளாக்லைன்சு : படிக்க நேரம் கிடைக்காத, ஆனால் பார்க்க வேண்டிய பதிவுகளைத் தொகுத்து திரட்டிக் கொடுக்கிறது.
    6. யாஹூ 360 : வாராந்தோறும் நடக்கும் நுட்பியல், உலக மற்றும் வர்த்தக செய்திகளின் தொகுப்பு.
    7. நொடி நீதி : தமிழ்/ஆங்கில வலைப்பதிவுகளில் கவர்ந்த குறிப்புகள் மற்றும் மறுமொழி சேகரிப்பு.
    8. பாஸ்டன் மெட்ப்ளாக்சு : எந்த ஊரு என்றாலும் அது வாழும் ஊரப் போல வருமா?
    9. கில்லி : ஊர் கூடி வடம் பிடித்து வலை நாடி பிடிக்கும் வேலை.
    10. நுட்பியல் : சோற்றுக்கட்சி; பூவா போட வைக்கும் தொழில் நுட்பங்களுக்கான துப்புகள்.
    11. அமேசான் : என்ன புத்தகம் வாங்கலாம்?
    12. ஃப்ளிக்கரு : படம் காட்டுவதில் ப்ளாக்கர் பிரச்சினை செய்தால், கை கொடுக்கும் தோழன்.
    13. ஃபோட்டோ பக்கெட்டு : அனிமேட்ட ஜிஃப் போட உதவும் வலையகம்.


    விரிவான பதிவு இங்கே: orgtheory.net » Blog Archive » Social Isolation in America: Changes in Core Discussion Networks Over Two Decades




    | |

    திங்கள், ஜூலை 17, 2006

    Jithan Zidane vs Mama Materazzi

    http://bsubra.wordpress.com/2006/07/18/zidanes-head-games/: இந்தப் பதிவை தவற விடக் கூடாது என்று நினைப்பவர்கள் அங்கும் செல்லலாம்.


    Mountain Dew Ad Ram Head Butt Zidane Materazziதீவிரவாதி ஜிடேன் பாவம்; பிச்சைப்பாத்திரம் தொடங்கி குட்டி பூர்ஷ்வா வரை அனுதாப அலை வீசும் இந்த நேரத்தில், வாசிம் அக்ரமுக்கும் அசராத அஞ்சாநெஞ்சன் க்ருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் மால்கம் மார்ஷலுடன் மல்லுக்கட்டிய காவஸ்கர் போன்றோர் என்ன ஆலோசனை சொல்லி இருப்பார்கள்?

    1. Yo Mama Jokes - Funny Clean Jokes about Yo Mama :: எசப்பாட்டு படித்திருக்கலாம். 'உங்க அம்மா காதலில் விழுந்தால், காதலே உடைந்து போகும்; அத்தனை குண்டாக இருக்கிறாள்'

    2. Headbutting for Self-Defense: The Conventional Wisdom is Wrong :: இது பல்கலைக்கழக திறனாய்வின் முடிவு. தலையால் பிறரை முட்டினால், உங்களுக்குத்தான் கேடு அதிகம் என்று ஆராய்ந்து விளக்குகிறார்.

    3. Zidane Head Butt Game - Presented by Addicting Games :: ஆசை தீர மார்கோ மாடேராட்சியை முட்ட முடிகிறது. எனக்கு 1500 புள்ளிகள் ஒரு தடவையும், இன்னொரு முறை 1280 மதிப்பெண்ணும், பெருமளவு வெறி தீர நெட்டித் தள்ளினேன். நீங்களும் ஆடிப் பாருங்க. அதுதான், இன்று ப்ளாக்ஸ்பாட் கிடையாதே... விளையாடுங்க.



    | |

    ஞாயிறு, ஜூலை 16, 2006

    Umar Anjali - Oli FM

    தமிழ் உலகம் மின் குழுமத்தில் :

    tamil-ulagam : Message: Setting up an Electronic Memorial for Umar Thambi -- Some Suggestions




    ஆல்பர்ட்:

    சகோதரர் உமர் அவர்களுக்காக அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் குரலிலேயே உங்கள் அஞ்சலியை நீங்கள் சகோதரர் உமர் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கலாம்.

    ஒலி பண்பலை: www.olifm.com

    மேற்குறித்த முகவரிக்குச் சென்றால் முகப்பில் song request என்ற இடத்தை அழுத்தி உங்களுக்காக என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது record பொத்தானை அழுத்தி உங்கள் அஞ்சலியை சுருக்கமாக சொல்லுங்கள்.

    துவங்கும் முன் உங்கள் பெயர், நாடு குறிப்பிடுங்கள். உங்கள் குரலை பதிவு செய்ததும் playயை போட்டுப்பார்த்துச் சரியாக வரவில்லையென்றால் மீண்டும் ஒலிப்பதிவு செய்யலாம். உங்களுக்கு திருப்தி ஏற்பட்டதும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சிட்டு subject ல் மறக்காமல் UMAR ANJALI என்று தட்டச்சிட்டு send பொத்தானை அழுத்துங்கள்.

    சகோதரர் உமர் அவர்களின் இல்லத்தில் இந்தநிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். எனவே உங்களுக்கு அவரோடுள்ள அறிமுகத்தைச் சொல்லி அஞ்சலியைச்சொல்லலாம். இந்த வாய்ப்பை வருகிற 21 ம் தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    இந்த நிகழ்ச்சி உலக நேயர்கள் கேட்கும் அளவில் ஒலிபரப்பப்படும் நாளை உங்களுக்கு நான் அறியத் தருகிறேன். சகோதரர் உமர் மேல் பற்றும் பாசமும் கொண்ட அன்பர்கள் இந்த
    குரல் அஞ்சலியை செய்து இந்தநிகழ்ச்சிக்கு தங்கள் பெரிதுமான ஒத்துழைப்பை நாடுகிறேன்.
    அன்புடன்,
    ஆல்பர்ட்



    | |

    Indecision

    பூந்தளிரா? பூங்கொடியா??




    ஒரு மரத்துப் பறவைகளா? அஷ்வினி ஹேர் ஆயில் விளம்பரமா??





    பிஜி-13 / முதியவர்களுக்கு மட்டுமான சில படங்கள்:

    1. பார்வை குன்றியவர்களுக்கான ப்ளேபாய்

    2. வலை பின்னுபவர்களின் விநோத பாலியல் விருப்பம்



    | |

    வெள்ளி, ஜூலை 14, 2006

    Hudood Ordinance

    விக்கிப்பீடியா:

  • ஜியா உல் ஹக் காலத்தில் பாகிஸ்தானில் இயற்றப்பட்ட சட்டம்

  • படிப்படியாக நீக்க பெர்வேஸ் முஷாரஃப் உட்பட, பெனாசிர் புட்டோ முதல் நவாஸ் ஷரீஃப் வரை பலரும் முயன்று, முல்லாக்களிடம் தோற்றுப் போயிருக்கிறார்கள்

  • வன்புணர்வு கொடுமைகள் முதல் பிறன் மனை நோக்கல், திருட்டு என்று சில்லறைக் குற்றங்கள் வரை இஸ்லாமிய முறைப்படி கல்லடி போன்ற தீர்ப்புகள் தர ஏதுவாக்கியது. குறிப்பாக திருமணம் தாண்டிய உறவில் ஆணே குற்றவளியாக இருந்தாலும் பெண்களை சிறையில் அடைக்க வகை வகுத்தது.

    இந்த சட்டம் குறித்த விரிவான பாகிஸ்தான் வலையகம்.




    Zara Sochieye:

  • இந்தியாவில் ஜீ டிவி தொலைக்காட்சியைப் புரட்டிப் போட்டது என்றால், பாகிஸ்தானில் ஜியோ டிவி கே2 புகழ் பெற்றிருக்கிறது.

  • மற்ற முயற்சிகள் போல் இல்லாமல், மார்க்க அறிஞர்களையும் இஸ்லாமியப் பெரியோர்களையும் பொதுமக்களுடன் ஊடாட தொலைக்காட்சிக்கு அழைத்திருக்கிறார்கள். இது வரை, ஹதூத் குறித்த உரையாடல்களில் மேற்கத்திய அறிவுஜீவிகளும் இடது சாரி முற்போக்காளர்களும் மட்டுமே கலந்து கொண்டு சேம் சைடு கோல் ஆக சட்டத்தைக் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்.

  • ஜியோ டிவியின் 'சற்றே யோசியுங்கள்' நிகழ்ச்சியின் மூலம் உலேமாகளுக்கும் - சட்டத்தை சாடுபவர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து, இஸ்லாமிய கோட்பாடு சட்டத்தின் சில கிடுக்கிப்பிடிகளை தளர்த்த ஒப்புதல் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

  • மொத்தமாக சட்டத்திற்கு அல்விதா (bye bye) சொல்லாவிட்டாலும், முதல் கட்டமாக சிறையில் இருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் விடுதலை ஆகியிருக்கிறார்கள்

  • இதுவரை இஸ்லாமிய முறைப்படி இயற்றப்பட்ட சட்டத்தைத் திரும்பப் பெறுதல் என்பதை யோசிக்க கூட இயலாது என்றும், மாற்று சிந்தனையாளர்களை ஒதுக்கி வைத்தும், ஆட்சியாளர்களையும் கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் - வெகுஜன பாதிப்பை தொலைபேசி / குறுமொழி / மின்னஞ்சல் மூலம் உணர்ந்து, பாதையை மாற்ற ஆரம்பித்திருப்பதே, பாதி வெற்றி எனலாம்.

    ஜியோ டிவியினால் என்னதான் நகர்ப்புற்ங்களில் சிற்சில எண்ண சலசலப்புகளை உருவாகினாலும், கிராமப்புறங்களில் இன்னும் பஞ்சாயத்துதான் அரங்கேறுகிறது என்று என்.பி.ஆரில். முடித்துக் கொண்டார்கள்.

    நிகழ்ச்சியைக் குறித்தும் ஜரா சோச்சியே-வின் தாக்கத்தைக் குறித்தும் முழு விவரங்கள்.




    | | |

  • Cooling Tamil Blogosphere

    Bunks Party Proudly Presents Onnum Onnum Renduஒண்ணும் ஒண்ணும் ரெண்டு (1+1 =2): சூடாக உள்ளது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, என் பங்குக்கு, கவனம் திருப்ப இந்த பதிவு.


    பூனை புலியாகுமா?




    கழுதைக்குத் தெரியுமா கைதி எண்?




    சட்டையைத் திற... காற்று வரும்




    சீறும் பாம்பை நம்பு
    சிரிக்கும் சிறுத்தையை நம்பாதே





    நாலு மிருகத்துக்கு நல்லதுன்னா
    எதுவுமே தப்பில்ல





    உன்னை நான் கட்டிக் கொள்ள
    என்னை நீயும் தழுவிக் கொள்ள
    உல்லாசம் பொங்கும் இன்ப நாள்




    மதிய உணவுக்கு நேரமாச்சு
    Legal Sea Foods அல்லது Bugaboo Creek போயிட்டு வரேன்.

    அதுவரை ஆழமான பதிவு எழுதுவது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள்.



    | |

    Africa - Novel - Socialism

    தற்போது புரட்டும், நூலகத்தில் கிடைத்த, மூன்று ஆங்கிலப் புத்தகங்கள்:

  • The Fate of Africa: From the Hopes of Freedom to the Heart of Despair: Martin Meredith - ஆப்பிரிக்காவின் வரலாறு. தெரியாத பூமிக்குள் கை பிடித்து அழைத்து செல்கிறார்.


  • All the King's Men : Robert Penn Warren: லூயிஸியானாவின் முன்னாள் கவர்னர் Huey Long-இன் உண்மைக் கதை என்பது வாங்க வைத்தது. சாதாரண மனிதன் சேவை செய்ய அரசியலுக்கு வருவதும், பதவிக்கு வந்தபின் கெட்டுப் போவதையும் விவரிக்கும் நாவல். 1946-இல் எழுதப்பட்டது. புலிட்சர் பரிசை வென்றிருக்கிறது.


  • Guilt, Blame, and Politics: Allan Levite: இருபது வயதில் கம்யூனிஸ்ட் ஆக இருப்பவர், நாற்பது வயதில் கன்சர்வேடிவ் ஆக மாறும் பின்னணி, சுய மதிப்பு vs விடுதலை உணர்ச்சி, சுகங்களை அனுபவித்து செல்லும் கையாலாகத்தனத்தினால் எழும் குற்றவுணர்வு போன்றவற்றை வலது சாரி கருத்தாக்கத்தில் கொடுக்கிறார்.



  • வியாழன், ஜூலை 13, 2006

    Crash - Movie Review

    க்ராஷ்

    தமிழோவியத்திற்கு நன்றி.

    9/11 முடிந்து ஒரிரு மாதம் கழிந்திருக்கும். உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கவும் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கவும் நண்பர்களுடன் ஷாப்பிங் சென்றிருந்தோம். அனைவரும் பன்னாட்டு உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவுடன் தான் அந்த இருவரை கவனித்தோம். அழுக்கு அதிகம் தெரியாத பழுப்பு நிற குர்தா, பைஜாமா. தலையில் வெள்ளை நிற பருத்தியுடைத் தொப்பி. உட்கார்ந்திருந்த மேஜையில் உணவோ, குளிர்பானமோ எதுவும் கிடையாது. எதைக் குறித்தோ ஆர்வமாய் ஆனால் தங்களுக்கு மட்டுமே கேட்கும் சன்னமான குரலில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். எங்களில் ஒருவன், 'அடுத்து எங்கே என்று திட்டம் தீட்டுகிறார்களோ?' என்று சத்தமாக யோசித்தான்.

    க்ராஷ் படம் முழுக்க 'பொலிடிகலி இன்கரெக்ட்' ஆக சிந்திப்பதை எதிராளியிடம் நேரடியாகத் தாக்குகிறார்கள். அதன் பிறகு, தங்கள் மனிதத்தை இயல்பாக நடப்பதன் மூலம் மனதில் ஊறிய மொழி, இன, வகுப்பு பிரிவினைகளை மேற்சென்று தாண்டியும் விடுகிறார்கள்.

    சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற படம். தொட்டுக் கொள்ள படத்தொகுப்பு, திரைக்கதை என்று மேலும் இரண்டு ஆஸ்கார்கள். நடித்தவர்களின் பட்டியலை பார்த்தால், ஹாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இருக்கிறார்கள். 21 கிராம்ஸ், ட்ரா·பிக் போன்ற சிதறலான காட்சிகளுடன், பராக்கு பார்த்து கவனம் சிதறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

    தேர்தலில் நிற்கும் வெள்ளை வேட்பாளரின் கார், கறுப்பர்கள் இருவரால் கொள்ளையடிக்கப் படுகிறது. அவரின் பணக்கார மனைவிக்கு பயத்தினாலும் தனிமையினாலும் எதைப் பார்த்தாலும் நம்பிக்கையின்மை தொற்றிக் கொள்கிறது. காரைத் திருடியவர்களில் ஒருவன், இரட்டை குதிரை சவாரியாக ஒரு புறம் குற்றவுணர்ச்சியும்; இன்னொரு புறம் பணத்தேவையுமாக, திருந்த யோசிப்பவன். இன்னொருவன், ஆதிக்க சமூகத்தை கடுமையாக சாடிக் கொண்டு, புத்திசாலித்தனமான வாதங்களினால், தன்னை மழுங்கடித்துக் கொள்பவன்.

    லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையை சுற்றி வரும் கதாமாந்தர்கள். அப்பாவிற்கான மருத்துவ செலவு செய்ய முடியாத இயலாமையை, வேறுவிதமாய் தீர்த்துக் கொள்கிறான் ஒருவன். இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் அந்த அருவருக்கத்தக்க நிகழ்வை கண்டிக்கும் அவனுடைய கூட்டாளியே, பிறிதொரு சந்தர்ப்பத்தில், இன உணர்வை வெளிப்படுத்துகிறான்.

    தொலைக்காட்சியில் உயர்பதவியில் இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கரும் இனபேதத்தை சகித்துக் கொள்ள நேரிடுகிறது. படப்பிடிப்பில் வெள்ளையனைப் போல் நடிக்கும் சகாவை, கறுப்பினத்தவன் போல் உச்சரித்துப் பேச வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறான். வண்டியோட்டுகையில் எவ்விதக் குற்றமும் செய்யாத போதும் DWB என்று செல்லமாய் அழைக்கப்படும் செய்கைக்காக மனைவியினைத் தடவி சுகம் காணும் போலீஸ் அதிகாரியிடம் செயலற்று நிற்கிறான். அந்தக் கோபம் எல்லாம், தன்னிடம் திருட வருபவனுக்கு கடுமையாக அறிவுரை கூறுவதாக மாறுகிறது. வழிப்பறிக்காரனைப் போன்ற ஓரிரு விஷ விதைகளால், மொத்த சமூகமே எவ்வாறு சித்தரிப்புக்கு உள்ளாகிறது என்று புரிய வைக்கிறான்.

    அமெரிக்காவை கலாச்சாரங்களை கலக்கியுருக்கும் கலயம் (melting pot) என்று சித்தரிப்பார்கள். இந்தப் படம் போதுமான அளவு வெள்ளையர், ஆப்பிரிக்க அமெரிக்கர், மெக்ஸிக்கர், பிற பழுப்பு நிறத்து ஸ்பானிய மொழியர், இரானியர், சீனர், என்று எவர் எப்படி அனுமாணிக்கப் படுகிறார்கள், எவ்வாறு உள்-சித்தரிப்பு நிகழ்கிறது என்பதை அணுகுகிறது. கூடவே, அமெரிக்காவுக்கு மட்டுமே உரித்தான குடியேறிகளுடன் நிறுத்தாமல், உலகத்துக்கே பொதுவான ஏழை - பணக்காரன்; காவலாளி - களவாணி; பதவி வகிப்பவன் - வகிக்காதவன் என்று ஏற்றத்தாழ்வுகள் நீக்கமற நிறைந்திருக்கும் இண்டு இடுக்குகளுக்கும் ஒளி பாய்ச்சுகிறது.

    விவரணப் படங்களுக்கு உரிய தகவல்களான, எதிர்ப்பக்கத்தில் கறுப்பர் நடந்து வந்தால் சாலையைக் கடந்து, அந்தப் புறமாக ஒதுங்கி நடப்பது அல்லது பர்ஸைத் தொட்டுப் பார்த்து பத்திரப்படுத்துவது - போன்ற ஆராய்ச்சித் தகவல்களை சம்பவமாகக் கோர்த்திருக்கும் லாவகம்; பதவிக்கு போட்டியிடுவதால் நடுநிலையை பிரஸ்தாபிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க அதிகாரிக்கு பதக்கம் குத்தி பெயரை நிலை நாட்டத் துடிக்கும் அரசியல்வாதியின் சந்தர்ப்பவாதம்; வாயிற்கதவை மாற்ற பட்ஜெட் இடிப்பதால், கடையை பாதுகாக்க முடியாமல் 9/11 வெறுப்பிற்குள்ளான அப்பாவி நடுத்தர வர்க்க வர்த்தகரின் இயலாமை; தான் மெக்ஸிகன் அல்ல என்று இனத்தின் சினம் தலைக்கேறுபவர், அடுத்த காட்சியில் ஆசியரின் ஆங்கிலப் புலமையை எள்ளி நகையாடும் அமெரிக்கத்தனம்; என்று ஒவ்வொரு சம்பவமும் கதாபாத்திரங்களை எதார்த்தமாக நகர்த்துகிறது.

    இவர் நல்லவர்; இவர் கெட்டவர்; இவர் உயர்ந்தவர்; இவர் மோசமானவர் - என்று மனிதன் வாழ்க்கையில் நடந்து கொள்வதில்லை. தவறிழைக்க வாய்ப்பு, அதிகார சந்தர்ப்பம், தப்பித்துக் கொள்ளும் சூழல், முன் நடந்த வாழ்க்கை சம்பவம், தனக்கு விதிவசத்தால் கிடைத்த அனுபவத்தினால் கிடைக்கும் நியாய மதிப்பீடு, போன்றவையே ஒவ்வொருவரையும் அவ்விதம் அந்தத் தருணத்தில் நடத்தி செல்கிறது. பிறர் பார்த்தால் மட்டுமே நியம அனுஷ்டானங்களை பின்பற்றுபவர்தான் இங்கே அதிகம். செல்லிடத்து சினம் காக்காமல் கோபத்தை பிரயோகிப்பதும், அதன் பலாபலன்கள் தன்னை வந்தடையும்போது பாதை மாறி செய்கையை மாற்றிக் கொள்வதை காட்டுகிறது.

    இவ்வளவு சேரியமான படமாக இருந்த போதிலும் ஜனரஞ்சகமான விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. நொடி நேரம் வந்துபோகும் கதாபாத்திரங்களும் அழுத்தமான வசனங்களினாலும் நிதானமான கேமிரா கவனிப்பினாலும், நாவலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை திரையில் கொடுக்கிறார்கள்.

    மிகை நாடும் கலை என்பதற்கு ஏற்ப, திரையில் மட்டுமே நடந்தேறக் கூடிய மன்னிப்பு கோரும் வாய்ப்புகளும், பிராயச்சித்தம் செய்து பாவமன்னிப்பு கேட்டுவிடும் அதிசய தற்செயல் காட்சியமைப்புகளும் பல இடங்களில் வாய் பிளக்க வைக்கிறது.

    அமெரிக்காவில் வாழ்வது நரகத்தைப் போன்றதோ? எல்லாருமே மனதில் அழுக்கு கொண்டிருந்தாலும் புறப்பூச்சுகளில் மினுக்குபவர்களோ? நிஜம் ஒன்றாக இருக்க, வெளித்தோற்றத்தில் இன்முகம் பாராட்டுபவர்களோ?
    என்று வெறுத்து வெதும்ப செய்யாமல், வாழ்க்கையில் விரியும் விநோதங்களைப் போல், இயற்கையில் நிகழும் பருவகாலங்களைப் போல், மக்கள் மனம் மாறிக் கொண்டே இருப்பதை சுட்டிக்காட்டி படம் முடிவடையாமல் தொடர்கிறது.



    | |

    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு